கறுப்பு என்பது சர்வதேச மொழி, இந்தியப் பிரதமருக்கு புரிந்திருக்கும்! - வைரமுத்து
சென்னை: கறுப்பு என்பது சர்வதேச மொழி; இந்தியப் பிரதமருக்கு அது நன்றாகப் புரிந்திருக்கும் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
காவிரிப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தத் தவறிய நரேந்திர மோடி இன்று தமிழகம் வந்தபோது வரலாறு காணாத எதிர்ப்பை எதிர்கொண்டார்.

5 கிலோமீட்டர் தூரத்தைக் கூட சாலையில் பயணிக்க முடியாமல், ஹெலிகாப்டரில் பறந்து கடக்க வேண்டிய நிலை. எங்கு பார்த்தாலும் கறுப்புக் கொடி, கறுப்பு பலூன்கள்தான்.
இந்த சூழல் குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள கருத்து:
"கறுப்பு என்பது சர்வதேச மொழி. இந்தியப் பிரதமருக்குப் புரிந்திருக்கும். காவிரி மேலாண்மை வாரியத்தைக் கட்டி எழுப்புங்கள். அது கர்நாடகத்துக்கு அநீதி அல்ல; தமிழ்நாட்டுக்கு நீதி."


Click it and Unblock the Notifications











