வடிவேலு எப்படி இருக்கிறார்... மருத்துவமனை வெளியிட்ட தகவல்
சென்னை : கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் வடிவேலுவின் உடல்நிலை எப்படி உள்ளது என்பது பற்றிய விரிவான அறிக்கையை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
நீண்ட இடைவேளைக்கு பிறகு வைகை புயல் வடிவேலு, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார். இந்த படத்தின் ஷுட்டிங்கிற்காக வடிவேலு, டைரக்டர் சுராஜ், தயாரிப்பாளர்களில் ஒருவரான தமிழ் குமரன் உள்ளிட்ட படக்குழுவினர் லண்டன் சென்றிருந்தனர். இந்த ஃபோட்டோ சமீபத்தில் சோஷியல் மீடியாவில் வெளியிடப்பட்டது.

மருத்துவமனையில் அனுமதி
லண்டனில் இருந்து திரும்பிய வடிவேலுவிற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக சென்னை - போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அப்டேட் தந்த அமைச்சர்
வடிவேலுவை தொடர்ந்து டைரக்டர் சுராஜ், தயாரிப்பாளர் தமிழ் குமரன் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்திருந்தார். மூவரும் நலமாக இருப்பதாகவும் அவர் கூறி இருந்தார். இதனையடுத்து வடிவேலு விரைவில் குணமடைய ரசிகர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்ததுடன், பிரார்த்தனையும் செய்து வந்தனர்.

விரைவில் டிஸ்சார்ஜ்
இந்நிலையில் வடிவேலு இப்போது எப்படி இருக்கிறார் என்பது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், வடிவேலுவின் உடல்நிலை தேறி வருகிறது. பயப்பட ஒன்றுமில்லை. அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தனிமையில் இருக்க அட்வைஸ்
டைரக்டர் சுராஜும் ராமச்சந்திரா மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட்டுள்ளார். வடிவேலு மற்றும் சுராஜுடன் லண்டன் சென்றவர்களுக்கு கொரோனா நெகடிவ் என வந்துள்ளது. இருந்தாலும் அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











