»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

நலிவடைந்த கலைஞர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்குவதற்காக தென்னிந்திய நடிகர்சங்க வளாகத்தில் புதிய மருத்துவனை திறக்கப்பட்டுள்ளது.

சென்னை-தி. நகரில் இந்தி பிரசார சபா சாலையில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் ரூ.3 லட்சம்செலவில் இந்தப் புதிய மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இதை நடிகர் சங்கத் தலைவர்விஜயகாந்த் இன்று காலை திறந்து வைத்தார்.

இதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,

ஆண்டு முழுவதும் இங்கு இலவச மருத்துவ வசதி கிடைக்கும் வகையில் அனைத்து வசதிகளும்செய்யப்பட்டுள்ளன.

எவ்வளவு செலவானாலும் தரமான மருந்துகளையே இங்கு வரும் நோயாளிகளுக்கு வழங்கஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த மருத்துவமனைக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் அளவில் மருத்துவ உதவி செய்யுமாறுகோரி முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கடிதம் எழுத உள்ளோம்.

இது தவிர தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை தேவைப்படும் நலிவடைந்த கலைஞர்களுக்குஅதற்குரிய சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்படும் என்றார் விஜயகாந்த்.

இன்றைய திறப்பு விழா நிகழ்ச்சியில் நடிகர்கள் ராதாரவி, நெப்போலியன், கார்த்திக், நடிகைவிந்தியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil