»   »  பாலிவுட்டில் கவர்ச்சி... மல்லுவுட்டில் ஹோம்லி... இது ராய் லக்‌ஷ்மி கேம்!

பாலிவுட்டில் கவர்ச்சி... மல்லுவுட்டில் ஹோம்லி... இது ராய் லக்‌ஷ்மி கேம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொச்சின் : நடிகை ராய் லக்‌ஷ்மி தமிழில் கவர்ச்சி நடிகையாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறார். போதிய வாய்ப்புகள் கிடைக்காத அவர் மலையாளக் கரையோரம் தஞ்சம் புகுந்தார்.
மலையாளத் திரையுலகம் அவருக்கான அங்கீகாரத்தையும் முக்கியத்துவத்தையும் எப்போதுமே தர தவறியதே இல்லை. மம்முட்டி, மோகன்லால் ஆகியோருடன் நல்ல வேடங்களில் நடித்து வந்தார்.

பாலிவுட்டிலும் தனக்கென தனி மார்க்கெட்டைப் பிடிக்க வேண்டும் என நினைத்த லக்‌ஷ்மி ராய் 'ஜூலி 2' படத்தில் கவர்ச்சியில் தாராளம் காட்டியுள்ளார்.

அது வேற இது வேற :

அது வேற இது வேற :

பாலிவுட்டில் கவர்ச்சிப் புயலாகக் களமிறங்கியிருக்கும் லக்‌ஷ்மி ராய்க்கு மீண்டும் மலையாளத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதை என்பதால் நடிக்கவிருக்கிறாராம்.

ஹோம்லி கேரக்டர் :

ஹோம்லி கேரக்டர் :

மம்முட்டி, மோகன்லால் இருவரின் படங்களில் ராய் லக்‌ஷ்மி நடிப்பதைப் பார்க்கும் ரசிகர்கள், இந்த இருவருக்கும் பொருத்தமான ஜோடி இவரைத் தவிர யாரும் இருக்க முடியாது என்றே சொல்கிறார்கள்.

மம்முட்டி - லக்‌ஷ்மி ராய் கெமிஸ்ட்ரி :

மம்முட்டி - லக்‌ஷ்மி ராய் கெமிஸ்ட்ரி :

அதிலும் மம்முட்டிக்கும் இவருக்குமான கெமிஸ்ட்ரி தான் 'அண்ணன் தம்பி', 'பருந்து', 'சட்டம்பி நாடு', 'ராஜாதி ராஜா' என நான்கு படங்களில் அடுத்தடுத்து இவர்களை ஜோடி சேர்த்தது.

மீண்டும் இணையும் ஜோடி :

மீண்டும் இணையும் ஜோடி :

இப்போது ஐந்தாவது முறையாக மம்முட்டியும் ராய் லக்‌ஷ்மியும் மீண்டும் ஜோடி சேர்கிறார்கள். பிரபல கதாசிரியரான சேது இயக்குனராக அறிமுகமாகும் 'கோழி தங்கச்சன்' படத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடிக்க உள்ளார் ராய் லட்சுமி. மூன்று கதாநாயகிகள் கொண்ட இந்தப்படத்தில் அனு சித்தாரா, தீப்தி சதி ஆகியோரும் நடிக்க இருக்கிறார்கள்.

English summary
Actress Raai laxmi acted in good roles with Mammootty and Mohanlal in Malayalam movies. She played very sexy in bollywood now and she is going to act again in Malayalam.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X