twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹாலிவுட்டை அதிர வைத்த ஜானி டெப் - ஆம்பர் ஹெர்ட் வழக்கு: விரைவில் திரைப்படமாக வெளியாகிறது

    |

    வாஷிங்டன்: 'பைரட்ஸ் ஆஃப் தி கரீபியன்' திரைப்பட தொடர் மூலம் உலக அளவில் பிரபலமானவர் ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்.

    திருமண வாழ்க்கையின் போது பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக ஜானி டெப்பின் முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்ட் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

    இதில் ஜானி டெப் வெற்றி பெற்ற நிலையில், இந்த வழக்கு தற்போது திரைப்படமாக உருவாகிறது.

    ஆம்பர் ஹெர்ட்டுடனான காதலும் விவாகரத்தும்

    ஆம்பர் ஹெர்ட்டுடனான காதலும் விவாகரத்தும்

    'பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன்' படங்களில் கேப்டன் ஜாக் ஸ்பேரோ என்ற கேரக்டரில் நடித்து உலகளவில் பிரபலமானவர் ஜானி டெப். கடந்த 1983ல் லோரி அனி அலிசன் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஜானி டெப், 2 ஆண்டுகளில் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார். அதன் பிறகு 2015ல் தன்னை விட 25 வயது குறைந்த அமெரிக்க நடிகையான ஆம்பர் ஹெர்ட்டை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் 15 மாதங்கள் வரை ஒன்றாக வாந்த நிலையில் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

    மாறி மாறி தொடரப்பட்ட நஷ்ட ஈடு வழக்குகள்

    மாறி மாறி தொடரப்பட்ட நஷ்ட ஈடு வழக்குகள்

    இந்நிலையில், 2018ல் பிரபல அமெரிக்க பத்திரிகையான வாஷிங்டன் போஸ்ட்டில், ஆம்பர் ஹெர்ட் எழுதிய கட்டுரை வெளியானது. அதில், தான் திருமண உறவின் போது பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டவள் என்று குறிப்பிட்டிருந்தார். இந்தக் கட்டுரையில் அவர் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. ஆனால், ஆம்பர் ஹெர்ட் எழுதிய கட்டுரை தன்னையும், தனது திரை வாழ்க்கையையும் பாதித்தது எனக் கூறி, அவர் மீது அவதூறு வழக்குத் தொடுத்தார் ஜானி டெப். மேலும், தனக்கு 50 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் ஜானி டெப் வழக்கு தொடர்ந்தார். இதற்கு பதிலடியாக, ஆம்பர் ஹெர்ட் 100 மில்லியன் டாலர் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார்.

    ஜானி டெப் – ஆம்பர் ஹெர்ட் வழக்கும் தீர்ப்பும்

    ஜானி டெப் – ஆம்பர் ஹெர்ட் வழக்கும் தீர்ப்பும்

    இந்த வழக்கின் விசாரணை வெர்ஜினியாவில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது இது தொலைக்காட்சியிலும் இணையத்திலும் ஒளிபரப்பாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏழு பேர் கொண்ட நீதிபதிகள் முன் நடந்த இந்த விசாரணையின் முடிவில், ஆம்பர் ஹெர்ட் தனது திருமண வாழ்வு குறித்து பொய் கூறினார் என்று தெரிவித்த நீதிமன்றம், ஜானி டெப்புக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. மேலும் இவ்வழக்கில் இழப்பீடாக ஆம்பர் ஹெர்ட் 15 மில்லியன் டாலர் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.

    திரைப்படமான ஜானி டெப் – ஆம்பர் ஹெர்ட் வழக்கு

    திரைப்படமான ஜானி டெப் – ஆம்பர் ஹெர்ட் வழக்கு

    இந்நிலையில், ஜானி டெப் - ஆம்பர் ஜெர்ட் வழக்கு வழக்கு திரைப்படமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ' Hot Take: The Depp/Heard Trial' என்ற பெயரில் பிரபல தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரிதுள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஜானி டெப் கேரக்டரில் மார்க் ஹெப்காவும், ஆம்பர் ஹெர்ட்டாக மேகன் டேவிஸ் நடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இப்படம் செப்டம்பர் 30ம் தேதி இலவசமாக ஸ்டீமிங் ஆகவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

    English summary
    Johnny Depp is famous worldwide for playing the character of Captain Jack Sparrow in 'Pirates of the Caribbean'. Johnny Depp's ex-wife Amber Heard is suing her for sexual abuse during their marriage. It has been reported that this case is now being made into a movie in Hollywood
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X