இன்னும் இரண்டே நாட்கள்...ஹாட்ஸ்டார் வெளியிட்ட மாறன் பிளாஷ் மாப் வீடியோ
சென்னை : தனுஷ் நடித்த மாறன் படம் ரிலீசாக இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அசத்தலான பிளாஷ் மாப் வீடியோவை ஹாட்ஸ்டார் தமிழ் இன்று வெளியிட்டுள்ளது. இது தனுஷ் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.
டைரக்டர் கார்த்திக் நரேன் எழுதி, இயக்கி உள்ள படம் மாறன். சத்யஜோதி ஃபிலிம்ஸ் பேனரில் டி.ஜி.தியாகராஜன் தயாரித்துள்ள இந்த படத்தில் தனுஷ், மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட், ராம்கி, மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு பாடலாசிரியர் விவேக், சுகாஸ்-ஷார்ஃப் ஆகியோருடன் இணைந்து திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதி உள்ளார்.

மார்ச் 11 மாறன் ரிலீஸ்
தனுஷ் முதல் முறையாக பத்திரிக்கையாளர் ரோலில் நடித்துள்ள மாறன் படம் மார்ச் 11 ம் தேதி நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. ஊழல் அரசியல்வாதியான சமுத்திரக்கனியை எதிர்த்து இன்வஸ்டிகேடிவ் ஜர்னலிஸ்டான தனுஷ் நடத்தும் போராட்டம் தான் படத்தின் கதையாம். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் நான்காவது முறையாக தனுஷ் இணைந்துள்ள படம் இது.

ஹிட் அடித்த பொல்லாத உலகம்
மாறன் படத்தில் மூன்று பாடல்கள் உள்ளன. இதில் முதல் சிங்கிளாக பொல்லாத உலகம் பாடலை தனுஷ் பாடி இருந்தார். இந்த பாடல் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. யூட்யூப்பில் 24 மணி நேரத்தில் 7.8 மில்லியன் பார்வைகளை பெற்றது. சமீபத்தில் மூன்றாவது சிங்கிளாக சிட்டுக்குருவி என்ற பாடல் வெளியிடப்பட்டது. இந்த பாடலை தனுஷே எழுதி, பாடி உள்ளார்.

செம ப்ரோமோஷன்
இந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஹாட் ஸ்டார் சார்பில் பொது இடங்களில் டான்ஸ் குழுவினரை வைத்து ப்ரோமோஷன் வேலைகள் நடத்தப்பட்டு வருகிறது. பெரிய மால் ஒன்றில் டான்ஸ் குழுவினர், பொல்லாத உலகம் பாடலுக்கு நடனமாடிய வீடியோ வெளியானது. பயாஸ் கோப் போன்றும் மாறன் படத்திற்காக அமைக்கப்பட்டு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்து வருகிறது.

பிளாஷ்மாப் வீடியோ
இந்நிலையில் இன்று பிளாஷ் மாப் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் பொல்லாத உலகம் பாடலுக்கு டான்ஸ் குழுவினர் சென்னையின் பல இடங்களில் நடனமாடி ப்ரோமோஷன் செய்வதை போல் வீடியோ அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் அனைவரையும் கவர்ந்துள்ளது. சூப்பர். செம மாறன் என பலரும் புகழ்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











