Just In
- 7 min ago
முதல்முறையாக.. பிரபல ஹீரோ ஜோடியாக மலையாளத்தில் அறிமுகமாகிறார், நம்ம லதா பாண்டி!
- 10 hrs ago
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- 11 hrs ago
லைகா தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் டான்.. வெளியானது சூப்பர் அப்டேட்!
- 11 hrs ago
சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி‘ … வெளியானது மிரட்டலான முன்னோட்ட காட்சி!
Don't Miss!
- News
செங்கோட்டை வன்முறை.. பாஜக ஆதரவு நடிகர் தீப் சித்து மீது எப்.ஐ.ஆர்.. டெல்லி போலீஸ் நடவடிக்கை
- Automobiles
என்ன இப்படியாயிடுச்சு.. தாருக்கு குவியும் முன்பதிவுகளால் செய்வதறியாது நிற்கும் மஹிந்திரா! பாகங்கள் பற்றாக்குறை
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 28.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிக்பாஸ் வீட்டில் மகிழ்ந்த.. நெகிழ்ந்த.. நிலை நாட்டிய தருணங்கள்.. லிஸ்ட் போட்டு உருகிய ஹவுஸ்மேட்ஸ்!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் மகிழ்ந்த.. நெகிழ்ந்த.. மற்றும் நிலை நாட்டிய தருணங்களை ஹவுஸ்மேட்ஸ் பகிர்ந்து கொண்டனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இதுவரை டாஸ்க்களை வைத்து சண்டை மூட்டிவிட்டு வந்த பிக்பாஸ் தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்.
இந்நிலையில் நேற்றைய எபிசோடில் வழக்கம்போல் பேசும் டாஸ்க்கை கொடுத்தார். அதாவது பிக்பாஸ் வீட்டில் மகிழ்ந்த, நெகிழ்ந்த மற்றும் நிலைநாட்டிய தருணங்களை ஷேர் செய்து கொள்ளுமாறு கூறினார்.
பிரேக்கப்புக்கு பிறகு இப்போதான் இவ்ளோ கோப பட்டிருக்கேன்.. தனியாக கேமராவிடம் விளக்கம் கொடுத்த பாலாஜி!

ஃபினாலே வாரத்தில்
இதில் முதல் ஆளாய் பேசிய ஆரி, மகிழ்வித்த தருணம் என ராம்ப் வாக்கில் வெற்றி பெற்றதும் அதுதான் என் முதல் வெற்றி என்றும் கூறினார். நெகிழ வைத்த தருணம் என கேப்டன்சியில் தமிழில் பேசியது, ரியோ இளைஞர்களை வைத்து கிட்சன் டீமை கொண்டு செய்தது என்றார். நிலைநாட்டிய தருணமாக ஃபினாலே வாரத்திற்குள் வந்ததை குறிப்பிட்டார்.

டேலன்ட் ரவுண்ட்
தொடர்ந்து பேசிய கேபி டேலன்ட் ரவுண்ட் எல்லாரும் தனது டான்ஸை பாராட்டி பேசியதை மகிழ்ந்த தருணமாக கூறினார். பின்னர் பிக்பாஸ் தங்கிளிஷில் ஸ்க்ரிப்ட் எழுதி அனுப்பி குட்டே அவார்டு ஃபங்கஷனை நடத்த கூறியதை நெகிழ்ந்த தருணமாக குறிப்பிட்டார். மேலுரும் 10வது வாரத்தில் பிக்பாஸிடம் அழுது கொட்டித்தீர்த்தது, அப்படியே வந்த பிறந்த நாள் செலிபிரேஷன் மற்றும் அந்த வாரத்தில் சேவ்வானது எல்லாமே நிலைநாட்டிய தருணமாக உணருகிறேன்

11 பேர் வாதாடியது
அடுத்து வந்து பேசிய பாலா தன்னுடைய மகிழ்ச்சியான தருணமாக கோர்ட் டாஸ்க்கின் போது 11 பேர் தனக்கு எதிராக வாதாடியதை குறிப்பிட்டார். தொடர்ந்து நிலை நிறுத்திய தருணமாக, போட்டியாளரின் அம்மா அவரது கேமையே ஸ்பாயில் பண்ணியதாக திட்டியது கில்ட்டியாக இருந்தது. கோபப்பட்டதால் நொறுங்கி போயிருந்தேன்.

கண்களில் கண்ணீர்
கமல் சார் இந்த வாரத்தில் என்னை சேவ்டு என்று கூறியது புதுசா பிறந்த ஃபீல் இருந்துச்சு. 2017 ஆம் ஆண்டு மிஸ்டர் இந்தியா டாப் 16ல் வந்த போது இருந்த ஃபீல் இருந்துச்சு என்றார். நெகிழ்ந்த தருணமாக நேற்று சேவ்வானது பின்னர் 2 பெண் போட்டியாளர்களுக்காக சிங்கப்பெண்ணே பாடல் போட்டது ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருந்தது கண்களில் தண்ணீர் வந்தது, ஒரு லைஃப்டைம் எக்ஸ்பீரியன்ஸாக இருந்தது அதுதான் நெகிழ்ந்த தருணம் என்றார்.

கை வலித்த போதும்..
அடுத்து வந்த ரியோ.. என்னை நிலைநாட்டிய தருணம், நான் வொர்த் இல்லன்னு மத்தவங்க பேசியதை வச்சு எனக்கே தோனுச்சு. ஆனால் டிக்கெட் டூ ஃபினாலே பலூன் பிடித்திருந்த போது உன்னால் முடியும் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்ட கை வலித்த போதும் பாலாஜிக்கு பிறகுதான் விட வேண்டும் என்று நினைத்திருந்தேன் அந்த தருணம் தான் என்றார்.

கமல் தேங்க் யூ சொன்னது
தொடர்ந்து நெகிழ்ச்சியான தருணம் நான் பேசுறது நடந்துக்குறது சரியா என்று எனக்கே டவுட்டாய் இருந்தது. என் வொய்ஃப் கிட்டே என்னை இப்போவும் உனக்கு பிடிச்சுருக்கான்னு கேட்டேன். அதுக்கு ரொம்ப பிடிச்சுருக்கு சொன்னா அதுதான் நெகிழ்ச்சியான தருணம் என்றார். மேலும் டாஸ்க்கில் வெற்றி பெற்ற பிறகு பாலா என்னை கட்டிப்பிடிச்சு பாராட்டியது மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு வாரம் கமல் சார் எல்லோரையும் சிரிக்க வச்சீங்க தேங்க்யூ ரியோ என்று கூறினார் அதுதான் நான் என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணம் என்றார்.

60 செகண்ட் டாஸ்க்
அடுத்து வந்து பேசிய சோம் ஹேப்பியான தருணம் என்றால் எல்லோரும் ஒரு முறை என்னை பெஸ்ட் பர்ஃபாமன்ஸ் என நாமினேட் செய்தீர்கள் அதுதான். அடுத்து நிலைநாட்டிய தருணம் டிக்கெட் டூ ஃபினாலே வின் பண்ணியது. நெகிழ்ச்சியான தருணம் 60 செகண்ட் பேசும் டாஸ்க்கில் திக்காமல் பேசியதற்காக கமல் சார் என்னை பாராட்டியது, பின்னர் அம்மாவிடம் வீடியோ காலில் பேசியது என குறிப்பிட்டார்.

சுரேஷ் வாங்கக்கூடாதுன்னு
தொடர்ந்து வந்த ரம்யா, எவிக்ஷன் ஃபிரி பாஸ் டாஸ்க்கில் அந்த பாஸ் எனக்கு அல்லது ஆஜித்துக்கு போகலாம் ஆனால் சுரேஷ் சாருக்கு போயிடக் கூடாது என்று நினைத்து விளையாடினேன். வெளியே வந்ததும் எல்லோரும் ரொம்ப பாராட்டினீங்க அதுதான் எனக்கு மகிழ்ச்சியான தருணம்.

சிங்கப்பெண்ணே பாடல்..
அடுத்து கிஃப்ட் கொடுத்த போது ஷிவானி கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டார். அந்த இடத்தில் எஸ்டாபிளிஷ் ஆனேன். அடுத்த நெகிழ வைத்த தருணம் என்றால் அது சிங்கப்பெண்ணே பாடல் போட்டபோது தான். நீங்கள் எல்லோரும் க்ளாப் பண்ணது, கூட சேர்ந்து பாடினது எல்லாமே எப்போ நினைச்சாலும் சந்தோஷப்படுவேன்.. என்றார்.

பிக்பாஸ் பாராட்டு
ஹவுஸ்மேட்ஸ் பேசியதை கேட்ட பிக்பாஸ், இந்த வீட்டில் உங்களை நிலை நிறுத்திக்க, நீங்கள் செய்த அனைத்துமே என்னை மகிழ்வித்தது. நெகிழ வைத்தது என்று பாராட்டினார். அதனைக் கேட்ட ஹவுஸ்மேட்ஸ் உற்சாகமாகி கைகளை தட்டி சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.