அபிஷேக்கை ரேக்கிங் செய்த ஹவுஸ்மேட்கள்...எப்பய்யா பேசுனீங்க இதெல்லாம் ?
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 இன்று 48 வது நாளை எட்டி உள்ளது. 18 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்ட இந்த போட்டியில் இதுவரை 6 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். 12 பேர் போட்டியாளர்களாக விளையாடி வந்தனர்.
இந்நிலையில் வைல்கார்டு என்ட்ரியாக யார் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல போகிறார். எப்போது வைல்கார்டு என்ட்ரி நடைபெறும் என எதிர்பார்ப்பு எழுந்தது. வைல்கார்டு என்ட்ரி இவர் தான் பலரின் பெயர்கள் கூறப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக நிகழ்ச்சியின் 21 வது நாளில் எலிமினேஷன் மூலம் வெளியேற்றப்பட்ட அபிஷேக் ராஜா, 47 வது நாளில் வைல்கார்டு என்ட்ரி மூலம் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.

அபிஷேக் ரீஎன்ட்ரி ஏன்
ரசிகர்களின் கடும் வெறுப்பை பெற்று, நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அபிஷேக் மீண்டும் நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்பட்டதை பலரும் எதிர்த்து வருகிறார்கள். இவர் மீண்டும் நிகழ்ச்சிக்குள் கொண்டு வரப்பட்டால் மக்கள் அளித்த ஓட்டுக்கள் என்னாச்சு என நெட்டிசன்கள் விஜய் டிவி.,யை கேள்வி கேட்டு வருகின்றனர்.

ரேக் செய்யும் ஹவுஸ்மேட்கள்
இந்நிலையில் நிகழ்ச்சியின் 48 வது நாளான இன்று காலை, இந்த வாரம் ஆளுமை வைத்திருக்கும் வருண், ஹவுஸ்மெட்களை அழைத்து மூச்சுப் பயிற்சி கொடுக்கிறார். அப்போது அனைவரும் கண்ணை மூடு அமர்ந்திருக்கும் சமயத்தில், அக்ஷரா மற்றும் ஐக்கி இருவரும் அபிஷேக்கின் பின்னால் இருந்து தலையில் தண்ணீர் கொட்டுகிறார்கள். இதனால் மற்றவர்கள் ஷாக் ஆவார்கள் என நினைத்தால், ஆளுக்கொடு பொருளை எடுத்து அபிஷேக்கின் தலை மீது கொட்டுகிறார்கள்.

யார் வந்தாலும் ரேக்கிங்
இதற்கு முன் அக்ஷராவும், ஐக்கியும் கார்டன் ஏரியாவில் உள்ள கேமிரா ஒன்றும் முன் சென்று, அழுகிய முட்டை, நான்கு நாட்களுக்கு முன் மீந்து போன சாதம், 10 நாட்களுக்கு முன் பிரிட்ஜில் வைக்கப்பட்ட புளி போன்ற பொருட்களை காட்டுகிறார். இதை வைல்கார்டு என்ட்ரியாக யார் வந்தாலும் அவர்களை ரேக்கிங் செய்ய வேண்டும். இதை அவர்கள் தலையில் கொட்ட வேண்டும் என முடிவு செய்து வைத்திருந்தோம். ஆனால் அபிஷேக்கே மீண்டும் வந்து விட்டார். ஏற்கனவே அறிமுகமான நபராக இருந்தால் இதை வைத்து அவரை ரேக்கிங் செய்ய போகிறோம் என்கிறார்கள்.

முன்பே தெரியுமா இது
இதை பார்த்த நெட்டிசன்கள், அடப்பாவிகளா...இதெல்லாம் எப்போய்யா பேசி முடிவு செய்தீர்கள். ஒன்றுமே தெரியாமல் சஸ்பென்சாக இருப்பது போல் அபிஷேக் வரவேற்றீர்கள். இப்போ இவ்வளவு ஏற்பாடு செய்து வைத்துள்ளீர்கள். அதுவும் அக்ஷரா, ஐக்கி தான் இதை செய்கிறார்கள். இதற்கு வருண் மட்டும் தான் உடந்தை என பார்த்தால் வீட்டில் உள்ள அத்தனை பேருக்கும் தெரிஞ்சிருக்கே என கலாய்த்துள்ளனர். அதே சமயம் இந்த ஃபன்னான நிகழ்வை ரசிகர்கள் மிகவும் ரசித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











