அண்ணாச்சியை விடாத இசைவாணி.. நீ ரொம்பவே மாறிட்ட என குற்றச்சாட்டுகளை அடுக்கும் ஹவுஸ்மேட்ஸ்!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் 25ம் நாளுக்கான முதல் புரமோ வெளியாகி வைரலாகி வருகிறது.

நெருப்பு வாரம் என்பதால் வரும் எல்லா புரமோவிலும் இசைவாணியை காட்டி வருகின்றனர்.

எப்படி அதிகாரம் செய்வது என்கிற குழப்பத்தோடு இருக்கும் இசைவாணியை தாமரை செல்வி, மதுமிதா உள்ளிட்ட ஹவுஸ்மேட்கள் நீ மாறிட்ட என விளாசும் புரமோ வெளியாகி உள்ளது.

நெருப்பு வாரம்

நெருப்பு வாரம்

கையில் நெருப்பு சக்தியே கிடைத்திருந்தும் அதை சரியான விதத்தில் பயன்படுத்தி வேற லெவல் கேம் ஆடியிருக்கலாம் இந்த வாரம் இசைவாணி. ஆனால், இன்னமும் மற்றவர்களிடம் பேச தயங்கிக் கொண்டு அதிகாரம் பண்ணாமல் கெஞ்சிக் கொண்டு இருக்கிறார்.

ஃபயர் இல்லை

ஃபயர் இல்லை

கானா பாடகியான இசைவாணி சும்மா ரவுண்டு கட்டி கேம் ஆடி கலக்குவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அவரிடம் அந்தளவுக்கு ஃபயர் இல்லாமல் இருப்பதை பார்த்து அப்செட் ஆகி வருகின்றனர். ஏதாவது பேசினால் பிரச்சனையாகி விடுமோ அடுத்தவர் மனம் கஷ்டப்பட்டு விடுமோ என்றே பேச வருவதை தயக்கத்துடனே பேசி வருகிறார்.

அதுவே பிடிக்கவில்லை

அதுவே பிடிக்கவில்லை

சர்வாதிகாரி டாஸ்க்கின் போது ஐஸ்வர்யா தத்தா இறங்கி ஆடிய கேம் தான் இன்னமும் ஹைலைட்டாக இருக்கிறது. ஆனால், சாஃப்ட்டாக ஹேண்டில் பண்ணும் இசைவாணியின் பேச்சே தாமரை செல்வி, இந்த வார தலைவி மதுமிதா உள்ளிட்ட போட்டியாளர்களுக்கு பிடிக்கவில்லை என்பது இன்றைய முதல் புரமோ மூலம் தெளிவாக தெரிகிறது.

பழையபடி இல்லை

பழையபடி இல்லை

பவர் கிடைத்ததும் நீ பழையபடி பாசத்தை காட்டவில்லை மாறிட்ட என தாமரை செல்வி சொல்வதும் தண்டனை கொடுத்ததற்காக மதுமிதா முதல் முதலாக இசையை எதிர்த்து வாய் திறந்து பேசுவதும் முதல் புரமோவில் இடம்பெற்றுள்ளன. எத்தனை முறை மீட்டிங் வைத்து இசை கெஞ்சினாலும் யாரும் அவர் சொல்பேச்சை கேட்பது போலவே தெரிவதில்லை.

அண்ணாச்சியை விட மாட்டார் போல

அண்ணாச்சியை விட மாட்டார் போல

இசைவாணிக்கும் இமான் அண்ணாச்சிக்கும் ஆரம்பத்தில் இருந்தே ஆகவில்லை. மற்ற போட்டியாளர்கள் இசை பேச்சை கேட்கவில்லை என்றாலும், அவர்களை எல்லாம் விட்டு விட்டு அண்ணாச்சி மட்டும் என் பேச்சை கேட்கவில்லை என புலம்பி வருகிறார். இப்படி விளையாண்டு கொண்டிருந்தால் சீக்கிரம் வெளியே வர வேண்டியதுதான் என்கின்றனர் நெட்டிசன்கள்.

வருண் என்ன பண்ண போறாரோ

வருண் என்ன பண்ண போறாரோ

நெருப்பு காயினை வைத்த பிறகு தான் சமைக்கவே ஆரம்பிக்க வேண்டும் என இசை ரூல்ஸ் போட்டுள்ள நிலையில், மற்ற காயின்களை விட நீர் காயினை வைத்திருக்கும் வருண் நான் காயின் வைத்த பிறகு தான் மத்தவங்க பாத்ரூம் போகணும்னு சொன்னா என்ன நடக்குமோ என்பதை தான் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X