»   »  ஆஸ்கர் ரவிச்சந்திரன் கடனுக்கு வேலாயுதம் தோல்வியும் முக்கிய காரணமாம்!

ஆஸ்கர் ரவிச்சந்திரன் கடனுக்கு வேலாயுதம் தோல்வியும் முக்கிய காரணமாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆஸ்கர் ரவிச்சந்திரனின் கடன் பிரச்சினைக்கு ஐ படம் மட்டுமே காரணம் இல்லையாம். அதற்கு முன் அவர் தயாரித்து தோல்வியடைந்த வேலாயுதம் உள்ளிட்ட படங்களும்தான் என தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் தமிழ் சினிமாக்காரர்களை அதிர வைத்த சம்பவம் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரனின் சொத்துகளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி எடுத்துக்கொண்டதுதான்.

அவருடைய தயாரிப்பில் அண்மையில் வெளியான ஐ படத்தில்கூட அவருக்கு லாபம் என்று கூறப்பட்ட நிலையில், எப்படி இவ்வளவு சிக்கலில் மாட்டினார் என்று கேட்டுக் கொண்டனர்.

How Aascar Ravi caught in the financial crunch?

அவருடைய சறுக்கல் ஒருநாளில் நடத்தல்ல, கடந்த சில ஆண்டுகளாகவே நடந்திருக்கிறது என்கிறார்கள்.

அவருடைய தயாரிப்பில் உருவான அந்நியன், தசாவதாரம் போன்ற பெரிய படங்கள் வெற்றி என்றாலும், மற்ற படங்களில் அவருக்கு பெரிய அளவில் நஷ்டம் எற்பட்டுள்ளது.

தசாவதாரம் படத்தைத் தொடர்ந்து வெளியான வாரணம் ஆயிரம், ஆனந்த தாண்டவம், வேலாயுதம், மரியான், வல்லினம், திருமணம் எனும் நிக்கா ஆகிய எல்லாப் படங்களுமே தோல்வியடைந்தன என்கிறார்கள்.

குறிப்பாக விஜய்யின் வேலாயுதம் தனுஷின் மரியான் ஆகிய படங்களில் அவருக்குப் பெரிய அடி என்கிறார்கள். அந்தப்படங்களுக்காக வாங்கிய கடன் மற்றும் வட்டிகள் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்ந்து அவருக்குக் கடும் நெருக்கடியை ஏற்படுத்திக் கொண்டிருந்த நேரத்தில் ஜெயம்ரவி நடித்த பூலோகம், கமலின் விஸ்வரூபம்2 ஆகிய படங்களிலும் கிட்டத்தட்ட ரூ 80 கோடிகள் வரை முடங்கிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

இவை எல்லாம் சேர்ந்துதான் அவரை இந்த நிலைக்குக் கொண்டுவந்துவிட்டது என்கிறார்கள்.

English summary
The failures of Vijay's Velayutham and Dhanush Mariyaan are the main reason for Aascar Ravichandiran's financial crunch.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil