Just In
- 1 hr ago
நம்புங்க நானும் நல்லவன்தான்.. ஏவியை பார்த்து ஃபீல் பண்ணிய பாலா.. கடைசியா பேசியது இதுதான்!
- 5 hrs ago
காயப்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள்.. ஃபினாலே மேடையில் விழுந்து உருக்கமாக மன்னிப்பு கேட்ட ஆரி
- 5 hrs ago
கடைசியா நேர்மை வென்று விட்டது.. பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி.. ரன்னர்-அப் பாலாஜி முருகதாஸ்!
- 6 hrs ago
கதர் ஆடையை கையில் எடுத்த கமல்.. புதிய ஃபேஷன் பிராண்ட் ‘KH’ .. போட்டியாளர்களுக்கு கதர் துணி பரிசு!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 18.01.2021: இன்னைக்கு இந்த ராசிக்காரங்க வாயை திறக்காம இருக்குறது நல்லது…
- News
தமிழகத்தில் வீடு இல்லாத குடும்பமே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்... முதலமைச்சர் புதிய வாக்குறுதி..!
- Finance
48% அதிகரிப்பாம்.. பெட்ரோல், டீசல் மீதான வரியால் தூள் கிளப்பிய வரி வசூல்.. !
- Automobiles
20-இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் காரை பார்த்திருக்கீங்களா?! இங்க பாத்துக்கோங்க
- Sports
வலிமையான அணிகள் மோதும் 62வது போட்டி... பரபர அனுபவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கன்ஃபார்மா தெரியும் நான் தான் வெளியே போவேன்.. அட அர்ச்சனாவை போலவே அனிதாவும் சொல்கிறாரே எப்படி?
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் அர்ச்சனா தான் தான் வெளியேற போகிறே என முன்னதாகவே சொல்லியது போல, இந்த வாரம் அனிதாவும் சொல்வது எப்படி என்று தான் புரியவில்லை.

ஆஜீத், கேபி அல்லது ஷிவானி ஆகிய மூவரில் ஒருவர் வெளியேற மாட்டார்கள் என அனிதா சம்பத்தும் ஆணித் தனமாக நம்புகிறார் என்கிற கேள்வியும் எழுகிறது.
கடந்த வாரம் ஆஜீத் போகமாட்டார், தான் தான் வெளியேறுவேன் என அர்ச்சனாவும் இதே ஆருடம் தான் பார்த்தார்.
ஆரி எப்படி முதலில் சேவ் ஆகிறார்.. புலம்பித் தள்ளும் பாலா, ரியோ, ஆஜீத்.. வைரலாகும் அன்சீன்!

சொல்லிடுவாங்களோ
இதை பார்த்தால், முன்கூட்டியே போட்டியாளர்களுக்கு எவிக்ஷன் பற்றி சொல்லிடுவாங்களோ என்று தான் தெரிகிறது. பிக் பாஸ் ஸ்க்ரிப்டட் என்றும் செமி ஸ்க்ரிப்டட் என்றும் அது ஆரம்பமான காலத்தில் இருந்தே விவாதங்கள் எழுந்து வருகின்றன. மற்ற மொழி பிக் பாஸில் நடைபெற்ற காட்சிகளையும், அப்படியே தமிழில் காப்பி பேஸ்ட் செய்த நிகழ்வுகளும் ஏற்கனவே பல முறை அரங்கேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

எவிக்ஷன் எப்படி நடக்குது?
வார வாரம் மக்கள் ஓட்டுப் போட்டுத்தான் போட்டியாளர்களை வெளியே அனுப்புகிறார்கள் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை கமல் பேசி வருகிறார். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் போட்டியாளர்களான கஸ்தூரி உள்ளிட்ட சிலர், அந்த ஓட்டு போடறதையெல்லாம் வச்சி எவிக்ட் பண்ணல, அது அந்த டீமோட முடிவு தான் என வெளிப்படையாகவே சொல்லியது குறிப்பிடத்தக்கது.

டஃப் போட்டியாளர்கள் வெளியேற்றம்
மேலும், மக்கள் இந்த சீசனில் டஃப் போட்டியாளர்கள் என பார்த்த சுரேஷ் சக்கரவர்த்தி, சம்யுக்தா, சனம் ஷெட்டி, அர்ச்சனா மற்றும் இப்போ அனிதா சம்பத் இப்படி இவர்களை எல்லாம் ஓட்டுக்கள் அடிப்படியாகத் தான் வெளியே அனுப்புகிறார்களா? என்கிற சந்தேகம் ஒட்டுமொத்த பிக் பாஸ் ரசிகர்களுக்குமே இருக்கத்தான் செய்கிறது.

மிக்சர் தின்னிகள்
ஆனால், அதிகளவிலான பிக் பாஸ் ரசிகர்கள் மிக்சர் தின்னிகள் என கிண்டல் செய்யப்படும் இந்த சீசன் போட்டியாளர்களான ஆஜீத், ஷிவானி, கேபி மற்றும் சோமசேகர் இன்னமும் பிக் பாஸ் வீட்டுக்குள் தான் இருக்கின்றனர். வெளியேற்றப்பட்டவர்களை விட இவர்களுக்கு கூடுதலான ஓட்டுக்கள் கிடைத்துள்ளன என சொல்வதை பலர் ஏற்காமலும், சிலர் நம்பியும் நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர்.

டி.ஆர்.பி முக்கியம்
மக்கள் எதிர்பார்த்த போட்டியாளர்களையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வரிசையாக வெளியேற்றினால், அந்த எவிக்ஷன் பற்றி வெளியே யாரும் பேச மாட்டார்கள். அதே போல ரசிகர்கள் மத்தியில் சர்ச்சைகளும் வெடிக்காது. அர்ச்சனா எல்லாம் வெளியே வந்தும் விஜய் டிவி தனது காட்சிகளை எடிட் செய்துவிட்டனர் என பேசுவதும் டி.ஆர்.பியை எகிற வைப்பதற்காகத்தான் என்கிற குற்றச்சாட்டுக்களும் எழுந்து வருகின்றன.

கன்ஃபார்மா நான் தான்
அதே போலத்தான் இந்த வாரம் கன்ஃபார்மா நான் தான் வெளியே போவேன் என அனிதா சொல்வதை பார்த்தால், ஏற்கனவே அறிவிக்கப்பட்டு அதன் காரணமாகவே பேசுவதை போலவே தெரிகிறது. இதே அனிதா சம்பத் கடந்த வாரம் அர்ச்சனா வெளியே போவதற்கு முன்பு கமல் சார் எபிசோடில் எப்படி ஆக்டிவாக இருந்தார் என்பதை மீண்டும் அந்த எபிசோடை போட்டுப் பார்த்தால் புரியும். என்ன நடந்தால் என்ன நமக்கு பிக் பாஸ் சுவாரஸ்யமாக இருந்தால் போதும் என்பது தான் பெருவாரியான ரசிகர்களின் நிலைப்பாடு!