twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அந்த ‘ஸ்ட்ரீட் ஃபைட்’ தான் புரூஸ் லீ உலகப் புகழ் அடைய காரணமா? 32 வயதில் மறைந்த ரியல் டிராகனின் கதை!

    |

    லாஸ் ஏஞ்சல்ஸ்: கலிஃபோர்னியாவில் உள்ள சீன மருத்துவமனையில் தான் புரூஸ் லீ 1940ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி பிறந்தார்.

    வெறும் 32 ஆண்டுகள் மட்டுமே இந்த உலகில் ஏகப்பட்ட சாதனைகளை செய்து உலகளவில் ரசிகர்களை கவர்ந்த புரூஸ் லீ ஜூலை 20, 1973ல் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

    உலகப் புகழ் பெற்ற புரூஸ் லீயாக அவர் மாறுவதற்கே அந்தவொரு ஸ்ட்ரீட் ஃபைட் தான் காரணம் என்கின்றனர்.

    மம்மூட்டியுடன் இணைகிறார் நயன்தாரா..திருமணத்திற்குப் பிறகு இன்னும் வேகம் எடுக்கிறாரா? மம்மூட்டியுடன் இணைகிறார் நயன்தாரா..திருமணத்திற்குப் பிறகு இன்னும் வேகம் எடுக்கிறாரா?

    பெண் பிள்ளைக்கு வைக்கும் பெயர்

    பெண் பிள்ளைக்கு வைக்கும் பெயர்

    பெண் பிள்ளைக்கும் வைக்கும் பெயரான லீ ஜூன் பேன் என்கிற பெயரை தான் புரூஸ் லீயின் தாயார் அவருக்கு முதலில் வைத்துள்ளார். அப்படி பெண் பிள்ளைக்கு வைக்கும் பெயரை வைத்தால், கண் படாது என்பது ஐதீகமாம். மருத்துவமனையில் நர்ஸ் வைத்த பெயர் தான் புரூஸ் லீ என்றும் பிற்காலத்தில் அந்த பெயரைத் தான் அவர் திரைப்படங்களில் பயன்படுத்தி உலகப் புகழ் பெற்றார் என்கின்றனர்.

    ரொம்பவே சாது

    ரொம்பவே சாது

    சிறு வயது முதலே புரூஸ் லீ ரொம்பவே சாதுவான பையனாக வளர்ந்து வந்தார். எந்த வம்புக்கும் செல்ல மாட்டாராம். அப்படி இருந்த புரூஸ் லீ ஒரே அடியில் எதிரிகளை ரியலாகவே வீழ்த்தும் திறமைக்கு சொந்தக்காரர் ஆனது எப்படி? சினிமாவில் அவரது என்டர் தி டிராகன் என்ட்ரி எப்படி அமைந்தது என்றெல்லாம் ஆராய்ந்தால், அதற்கெல்லாம் காரணம் அந்த ஒரு ஸ்ட்ரீட் ஃபைட் தான் என்கின்றனர்.

    ஸ்ட்ரீட் ஃபைட்

    ஸ்ட்ரீட் ஃபைட்

    சாதுவாக இருந்த புரூஸ்லீயை அவரது 13வது வயதில் நண்பர்கள் சிலர் கண்டபடி தாக்கி அடித்துள்ளனர். அப்போது நடந்த ஸ்ட்ரீட் ஃபைட்டில் புரூஸ் லீக்கு பயங்கர அடி விழுந்து இருக்கிறது. அப்போ தான் மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையை கற்றுக் கொள்ள வேண்டும் என புரூஸ் லீ முடிவு செய்திருக்கிறார். விங் சுவான் எனும் தற்காப்பு கலையை கற்றுக் கொண்ட பின்னர் தன்னை தாக்கியவர்களை புரட்டி எடுத்து விட்டாராம் ப்ரூஸ் லீ. அந்த ஸ்ட்ரீட் ஃபைட் மட்டும் நடக்காமல் இருந்தால், புரூஸ் லீ என்கிற மனிதர் உலகுக்கு தெரிந்திருக்க மாடார். அதே சமயம், புகழின் உச்சத்துக்கு சென்ற அவர் 33 வயதிலும் இறந்திருக்க மாட்டார் என்கின்றனர்.

    மறக்கவே முடியாது

    மறக்கவே முடியாது

    1973ல் புரூஸ் லீ மறைந்தாலும், அவரது பெயர் மற்றும் புகழ் இன்னமும் உலக ரசிகர்கள் மத்தியில் மறையவே மறையாது. குவெண்டின் டரண்டினோ தனது Once upon A Time in Hollywood படத்தில் புரூஸ் லீ டூப் கலைஞரிடம் அடி வாங்கியதாக காட்சி வைத்த நிலையில், அந்த படத்தை சீனாவில் ரிலீஸ் செய்யவே தடை விதிக்கப்பட்டது. புருஸ் லீயை மார்ஷியல் ஆர்ட்ஸ் கலைஞர் கடவுளாகவே வணங்கி வரும் பழக்கமும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Bruce Lee's death anniversary today. His fans from all over the world pays respect to the great martial arts legend who died in her early age. Here we check, how a street fight turns him as a Martial Arts Legend.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X