»   »  மாயமான மதன் மிரட்டியதாக சிவா கூறுவது வேடிக்கையாக உள்ளது: வக்கீல்

மாயமான மதன் மிரட்டியதாக சிவா கூறுவது வேடிக்கையாக உள்ளது: வக்கீல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வேந்தர் மூவீஸ் மதன் தலைமறைவாகி 6 மாதங்களாகும் நிலையில் அவர் எப்படி சிவகார்த்திகேயனை மிரட்ட முடியும் என மதனின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

தன்னை சிலர் மிரட்டுவதாகக் கூறி நடிகர் சிவகார்த்திகேயன் ரெமோ சக்சஸ் மீட்டில் அழுதார். எங்களை நிம்மதியா வேலை பார்க்க விடுங்கள் என்று கோரிக்கை விடுத்தார்.

How can Vendhar movies Madhan threaten Sivakarthkeyan?: Lawyer

அவரை எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மதன் மற்றும் வேந்தர் மூவிஸ் மதன் ஆகியோர் மிரட்டியதாக செய்திகள் வெளியாகின. புதுப்படத்திற்காக அவர்கள் இருவரும் சிவாவுக்கு முன்பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. சிவாவோ இரண்டு மதன்களிடம் இருந்தும் பணம் வாங்கவில்லை என்கிறார்.

இந்நிலையில் இது குறித்து வேந்தர் மூவிஸ் மதனின் வழக்கறிஞர் கூறுகையில்,

வேந்தர் மூவிஸ் மதனை கடந்த 6 மாதங்களாக காணவில்லை. அவர் மிரட்டியதாக சிவகார்த்திகேயன் கூறுவது வேடிக்கையாக உள்ளது. மதன் எப்பொழுது மிரட்டினார் என்பதை சிவா தெரிவித்தால் அவரை கண்டுபிடிக்க வசதியாக இருக்கும் என்றார்.

English summary
Vendhar movies Madhan's lawyer said that it is really funny of Sivakarthikeyan saying that missing producer threatened him.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil