twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆஹா... இதை வச்சிருந்தா எப்படி கூப்பிட்டிருப்பாய்ங்க? மிஸ்டர் பீனுக்கு முதன்முதலா வச்ச பெயர் இதுதான்

    By
    |

    சென்னை: நகைச்சுவை என்பது விசித்திர கலை. எல்லோருக்கும் வாய்த்துவிடாது அப்படியொரு ஆர்ட். மிஸ்டர் பீன், அதில் மாஸ்டர்.

    'எம் மூஞ்சை கொஞ்ச நேரம் குறுகுறுன்னு உத்துப்பாருங்க... தன்னால சிரிப்பீங்க...' என்று ஒரு படத்தில் சொல்வார் வடிவேலு. அது அப்படியே பொருந்தும் மிஸ்டர் பீனுக்கு.

    குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை, மிஸ்டர் பீனை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது. அதற்கு காரணம், அவரது முகபாவங்கள். ஒரே முகத்தில் ஓராயிரம் எக்ஸ்பிரஷன் ஸ்கள். எப்படி தொடங்கினார் இதை?

    யுனிவர்சிட்டி

    யுனிவர்சிட்டி

    அது ஒரு கதை என்கிறார் பீன். 'ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டியில எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் படிச்சிட்டிருந்தேன். அப்பதான் எனக்கு நடிக்கும் ஆசை வந்தது. வாய்ப்புக் கேட்டேன். திடீர்னு ஒரு நாள், நீ ஸ்டேஜ் ஷோ பண்றே-ன்னு சொன்னாங்க. எனக்கு 48 மணி நேரம் இருந்தது. என்ன செய்யலாம்னு யோசிச்சேன். நான் எதையும் எழுதி வச்சுக்கலை.

    கண்ணாடி முன் நின்று

    கண்ணாடி முன் நின்று

    ஏன்னா நான் ரைட்டர் இல்லை. அப்பதான் கண்ணாடி முன்னால நின்னு என் முகத்தைப் பார்த்தேன். அஞ்சே அஞ்சு நிமிஷம் முகத்தை அங்கயும் இங்கயும் அசைச்சு, கோணலாக்கி வளைச்சுப் பார்த்தேன். என் கேரக்டர் அங்கதான் உருவாச்சு என்று பிளாஷ்பேக் செல்கிறார் பீன்.

    முகம் சொத்து

    முகம் சொத்து

    அந்த நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைக்க, முகத்தை நம்ப தொடங்கினார் பீன். பிறகு அவர் முகமே சொத்தானது. நான் செய்வதில் லாஜிக் இருக்கோ, இல்லையோ, சிரிக்க வைக்க முடியுதுங்கறது சந்தோஷமா இருக்கும் என்கிறார் பீன்.

    உலகம் கொண்டாடும்...

    உலகம் கொண்டாடும்...

    பொதுவாக ஒரு மொழியில் நடிக்கும் காமெடியன்கள் மற்ற மொழி ரசிகர்களுக்குத் தெரியாது. நம்ம ஊர் வடிவேலுவை, இந்தி ரசிகர்களுக்கு அதிகம் தெரியாது. அதே போல அங்குள்ள ஜானி லீவரை இங்கு தெரிந்திருப்பவர்கள் குறைவு. ஆனால் மிஸ்டர் பீன், உலகம் கொண்டாடும் காமெடியன்!

    உடல் மொழி

    உடல் மொழி

    காரணம் அவரது காமெடி, உடல் மொழியால் உருவாக்கப்படுபவை. 'நான் போயிருக்காத, கேள்விபட்டிராத நாடுகள்ல கூட என் காமெடி ரசிக்கப்படுது.. ஏன்னா முக எக்ஸ்பிரஷன் களுக்கு மொழி தேவையில்லையே என்கிற பீனின் காமெடிகள் சுமார் 200 நாடுகளில் வெளியாகிறதாம்.

    மிஸ்டர் வொயிட்

    மிஸ்டர் வொயிட்

    இவருக்கு மிஸ்டர் பீன் என்ற பெயர் வந்த கதை சுவாரஸ்யமானது. அதாவது 1990 ஆம் ஆண்டில், சேனல் ஒன்றுக்காக, காமெடி நிகழ்ச்சி ஒன்றை உருவாக்கினார்கள். அப்போது அதற்கு வைக்கப்பட்ட பெயர், மிஸ்டர் வொயிட்.

    காலிபிளவர்

    காலிபிளவர்

    எல்லாம் முடிந்து ஓளிபரப்புக்கு முன் பெயரை மாற்றலாம் என முடிவு செய்தார்கள். அப்போது காய்கறிகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. அதில் ஒன்று காலிபிளவர். இதுதான் முடிவானதாம். கடைசி நிமிடத்தில் பீன்ஸ் பெயர் வர, அதை பீன் ஆக்கி, மிஸ்டர்.பீனை உருவாக்கி இருக்கிறார்கள். பின்னர் இந்த பெயரை நிலைத்துவிட்டது.

    வாழ்த்துகள்

    வாழ்த்துகள்

    இன்று மிஸ்டர் பீனுக்கு பர்த் டே. வாழ்த்துகள் பீன். இன்னும் சிரிக்க வைக்க நீங்களும் குலுங்கி சிரிக்க நாங்களும் எப்போதும் ரெடி.

    English summary
    Originally, Mr.bean was going to be called Mr. White. Then the show’s creators began throwing around some vegetable names, and considered Mr. Cauliflower before deciding on Mr. Bean.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X