»   »  அது எப்படி துல்கருக்கு சிறந்த நடிகருக்கான விருது கொடுக்கலாம்?: மல்லுவுட் ரசிகர்கள் கோபம்

அது எப்படி துல்கருக்கு சிறந்த நடிகருக்கான விருது கொடுக்கலாம்?: மல்லுவுட் ரசிகர்கள் கோபம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: அது எப்படி துல்கர் சல்மானுக்கு சிறந்த நடிகருக்கான கேரள மாநில விருது அளிக்கலாம் என்று மல்லுவுட் ரசிகரக்ள் பலர் பொங்கி எழுந்துள்ளனர்.

2015ம் ஆண்டுக்கான கேரள மாநில விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில் சார்லி படத்தில் சிறப்பாக நடித்ததற்காக துல்கர் சல்மானுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. இதனால் துல்கரின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதே சமயம் பலருக்கு துல்கருக்கு விருது கிடைத்ததில் வருத்தம் ஏற்பட்டுள்ளது.

துல்கர்

துல்கர்

துல்கருக்கு கடந்த ஆண்டு சிறந்த நடிகர் விருது கொடுத்திருக்கலாம். அவர் ஞான் படத்தில் சூப்பராக நடித்திருந்தார். சார்லி படத்திலும் அவர் திறமையாக நடித்திருந்தாலும் அவரை விட பிற நடிகர்கள் அருமையாக நடித்துள்ளனர் என்கின்றனர் ரசிகர்கள்.

மம்மூட்டி

மம்மூட்டி

பத்தேமாரி படத்தில் மம்மூட்டி அசத்தியிருந்தும் அவருக்கு சிறந்த நடிகர் விருது வழங்கவில்லை. கடந்த ஆண்டும் சிறப்பாக நடித்தும் அவருக்கு விருது வழங்கவில்லை. இந்த ஆண்டு அவர் ஒரே மாதிரியாக நடிப்பதாகக் கூறி விருது வழங்கவில்லை என்று ரசிகர்கள் தங்களின் ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.

ஜெயசூர்யா

ஜெயசூர்யா

ஜெயசூர்யா சு..சு..சுதி வாத்மீகம் படத்தில் திக்கி திக்கி பேசுபவராக அருமையாக நடித்திருந்தார். அவருக்கு தான் கேரள அரசின் சிறந்த நடிகருக்கான விருது கிடைக்கும் என்று மல்லுவுட்காரர்கள், ரசிகர்கள் கூறினர். ஆனால் அவருக்கு ஜுரி விருது தான் கிடைத்தது.

ஜெயசூர்யாவுக்கு இல்லை

ஜெயசூர்யாவுக்கு இல்லை

கடந்த ஆண்டு ஜெயசூர்யா அப்போத்திகரி என்ற படத்திற்காக உடல் எடையை குறைத்து தனது நடிப்பால் ரசிகர்களை ஈர்த்தார். அந்த ஆண்டும் அவருக்கு விருது கிடைக்கவில்லை.

ப்ரித்விராஜ்

ப்ரித்விராஜ்

வல்லிய சிறகுள்ள பக்ஷிகள் படத்திற்காக குஞ்சாக்கோ போபனுக்கும், என்னு நின்டே மொய்தீன் படத்திற்காக ப்ரித்விராஜுக்கும் சிறந்த நடிகருக்கான விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Mollywood fans are reportedly not happy with Dulquer Salman getting Kerala state award for best actor.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil