twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அதென்ன 'பேட்ட'ன்னு ஒரு தலைப்பு, பேட்ட வேலன்னு கதாபாத்திரம்: கா.சு. விளக்கம்

    By Siva
    |

    சென்னை: ரஜினியின் படத்திற்கு பேட்ட என்ற பெயர் வைத்தது குறித்து தெரிவித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள பேட்ட படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

    இந்நிலையில் தலைப்பு குறித்து விளக்கம் அளித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

    பேட்ட

    பேட்ட

    ரஜினியின் படத்திற்கு பேட்ட என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டபோது அது என்ன பேட்டன்னு ஒரு தலைப்பு என அனைவரும் கேட்டனர். அதற்கு தற்போது பதில் அளித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

    கார்த்திக் சுப்புராஜ்

    கார்த்திக் சுப்புராஜ்

    என் படங்களுக்கு நான் கடைசி நிமிஷத்தில் தான் தலைப்பு வைப்பேன். ஆனால் இந்த படம் உறுதியானதில் இருந்தே தலைப்பை கூறுமாறு ரஜினி சார் கேட்டுக் கொண்டே இருந்தார். அவருக்கு தலைப்பு மிகவும் முக்கியம். கதையை கேட்ட உடன் அந்த கதாபாத்திரத்திற்கு தன்னை தயார் செய்யத் துவங்கி விடுவார் ரஜினி சார் என கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

    பேட்ட

    பேட்ட

    ரஜினி சார் மீண்டும் மீண்டும் தலைப்பை கேட்ட உடன் எனக்கு பதட்டமாகிவிட்டது. நான் பல தலைப்புகளை பரிந்துரைத்தேன். ஆனால் அவை எல்லாம் அவருக்கு பிடிக்கவில்லை. ஒரு நாள் பேட்ட எப்படி என்று கேட்டேன். அவர் பேட்ட பேட்ட பேட்ட என்று சில முறை முணுமுணுத்தார். பின்னர் என்னை பாராட்டினார் என்கிறார் கார்த்திக் சுப்பராஜ்.

    பரிந்துரை

    பரிந்துரை

    தன் கதாபாத்திரத்தின் பெயரை பேட்ட என்று வைக்குமாறு ரஜினி சார் தான் கூறினார். இதையடுத்தே அவர் கதாபாத்திரத்தின் பெயர் பேட்ட வேலன் என்று வைக்கப்பட்டது என்று கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார். பேட்ட படம் உலக அளவில் இதுவரை ரூ. 200 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Director Karthik Subbaraj has explained how did he end up naming his movie Petta.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X