ரூசோ சகோதரர்களுக்கு என்னை எப்படி தெரியும்? செட்டில் ஒருத்தரையும் விடாம கேட்டுட்டேன்.. தனுஷ் பளிச்!
மும்பை: தி கிரேமேன் ப்ரீமியர் நிகழ்ச்சி புதன்கிழமை மும்பையில் நடைபெற்றது. அதில், நடிகர் தனுஷ் வேட்டி சட்டையில் பங்கேற்று அனைவரையும் வியக்க வைத்தார்.
நடிகை கத்ரீனா கைஃப்பின் கணவரும் பாலிவுட் நடிகருமான விக்கி கவுஷல் உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்கள் அந்த ப்ரீமியர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
தனுஷிடம் பேட்டி எடுத்த நபர், தி கிரேமேன் படப்பிடிப்பு தளத்தில் நடந்த சுவாரஸ்ய விசயங்கள் ஏதாவது சொல்லுங்கள் எனக் கேட்டதற்கு, தனுஷ் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.

தனுஷின் ஹாலிவுட் என்ட்ரி
அவெஞ்சர்ஸ் படங்களை இயக்கிய ரூசோ சகோதரர்கள் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள தி கிரேமேன் படம் நாளை நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அமெரிக்காவில் சமீபத்தில் தி கிரேமேன் ப்ரீமியர் காட்சி திரையிடப்பட்ட நிலையில், மும்பையில் நேற்று திரையிடப்பட்டது. அந்த விழாவுக்கு வேட்டி அணிந்து வந்திருந்தார் நடிகர் தனுஷ்.

சுவாரஸ்ய சம்பவம்
தனுஷ், ரூசோ சகோதரர்கள் அமர்ந்திருக்க அவர்களிடம் ஹோஸ்ட் ஏகப்பட்ட கேள்விகளை கேட்க அதற்கு கூலாக பதில் அளித்தனர். நடிகர் தனுஷிடம் தி கிரேமேன் படப்பிடிப்பு தளத்தில் நடந்த ஏதாவது ஒரு சுவாரஸ்யமான சம்ப்வத்தை எங்களுக்காக ஷேர் செய்ய முடியுமா? என்கிற கேள்வியை எழுப்பினார். அதற்கு தனுஷ் அளித்த பதில் தான் தற்போது சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.

என்னை எப்படி தெரியும்
கேப்டன் அமெரிக்கா நடிகர் கிறிஸ் எவான்ஸ், பிளேட் ரன்னர் நடிகர் ரியான் கோஸ்லிங் நடிக்க அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் உள்ளிட்ட மார்வெல் படங்களை இயக்கிய ரூசோ சகோதரர்கள் இயக்கும் தி கிரேமேன் படத்திற்காக தன்னை தேர்வு செய்ததே நம்ப முடியாத ஒன்றாக இருந்தது. படப்பிடிப்பு தளத்தில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு நடுவே, கிடைக்கிற கேப்பில் அனைவரிடமும் கேட்டு விட்டேன், ரூசோ சகோதரர்களுக்கு என்னை எப்படித் தெரியும்? என்று என தனுஷ் பேசிய வீடியோ டிரெண்டாகி வருகிறது.
அவிக் சான்
உலகிலேயே கொடூரமான கொலைகாரன் அவிக் சான் எனும் கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் தி கிரேமேன் படத்தில் நடித்துள்ளார். நெட்பிளிக்ஸில் ஜூலை 22ம் தேதி வெளியாக உள்ள தி கிரேமேன் படத்திற்காக உலக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். தனியாக தனுஷுக்கு ஒரு படத்தை இயக்கவும் திட்டம் போட்டு வருவதாக ரூசோ சகோதரர்கள் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











