»   »  போதைப் பொருள் வழக்கில் நடிகர், நடிகைகள் திடீர் என சிக்கியது எப்படி தெரியுமா?

போதைப் பொருள் வழக்கில் நடிகர், நடிகைகள் திடீர் என சிக்கியது எப்படி தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: நடிகர் ரவி தேஜாவின் தம்பி பரத் சாலை விபத்தில் பலியானது குறித்த விசாரணையின்போது தான் போதைப் பொருள் கும்பல் சிக்கியதாம்.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஹைதராபாத்தில் நாசா என்ஜினியர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் போதைப் பொருள் பயன்படுத்தும் தெலுங்கு திரையுலகை சேர்ந்த 15 பேருக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

நடிகர்கள் ரவி தேஜா, நவ்தீப், தனிஷ், நடிகைகள் சார்மி, முமைத் கான் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிகர்கள்

நடிகர்கள்

போதைப் பொருள் வழக்கில் சிக்கியுள்ள நவ்தீப், தனிஷ், முமைத் கான் ஆகியோரோ இதுக்கும், தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

போதை

போதை

10 இளம் நடிகர்களுக்கு போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் உள்ளது என்று பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் கூட தெரிவித்துள்ளார்.

எப்படி?

எப்படி?

தெலுங்கு திரையுலக பிரபலங்கள் போதைப் பொருள் விஷயத்தில் திடீர் என்று சிக்கியது எப்படி என்று தெரிய வந்துள்ளது. ரவி தேஜாவின் தம்பி பரத் ராஜ் அண்மையில் சாலை விபத்தில் பலியானார்.

பரத் ராஜ்

பரத் ராஜ்

பரத் ராஜின் செல்போனில் போதைப் பொருள் கும்பலின் செல்போன் எண்கள் மற்றும் சில முக்கியத் தகவல்கள் இருந்துள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர். அதன் பிறகே பிற பிரபலங்கள் சிக்கியுள்ளனர். முன்னதாக பரத் போதைப் பொருள் வைத்திருந்த வழக்கில் கைதானார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
According to reports, information got from the deceased Bharath Raj's phone leads to the drug racket bust in Hyderabad.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil