»   »  ப்ளீஸ், சிரிக்காம படிங்க: இப்படி தான் அசினுக்கும், ராகுலுக்கும் காதல் வந்துச்சாம்!

ப்ளீஸ், சிரிக்காம படிங்க: இப்படி தான் அசினுக்கும், ராகுலுக்கும் காதல் வந்துச்சாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகை அசினுக்கும், மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் ஷர்மாவுக்கும் இடையே காதல் எப்படி வந்தது என்று பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார்.

கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு சென்று அங்கேயே செட்டில் ஆன அசினுக்கு அங்கு மவுசு இல்லை. இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் வராமல் இருந்தது. இதற்கிடையே அசினும், மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் ஷர்மாவும் காதலிப்பதாக பாலிவுட்காரர்கள் பேசிக் கொண்டனர்.

அசினோ, ராகுலோ இது குறித்து வாய் திறக்கவில்லை.

அக்ஷய் குமார்

அக்ஷய் குமார்

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரும், ராகுலும் நெருங்கிய நண்பர்கள். அக்கி தான் ராகுலும், அசினும் சந்திக்க ஏற்பாடு செய்துள்ளார். அவர்கள் காதலர்களாக மாறவும் அவர் தான் காரணமாம்.

காதல்

காதல்

அசின், ராகுல் காதலிப்பதை நான் மூன்றரை முதல் நான்கு ஆண்டுகளாக யாருக்கும் கூறாமல் ரகசியமாக வைத்திருந்தேன். அவர்கள் சந்திக்க நான் தான் ஏற்பாடு செய்தேன் என்கிறார் அக்ஷய்.

கண்ணாமூச்சி

கண்ணாமூச்சி

ஹவுஸ்ஃபுல் 2 படப்பிடிப்பின்போது நாங்கள் டெல்லியில் இருந்தோம். சிரிக்காதீர்கள், நாங்கள் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடினோம். அப்போது ராகுலும், அசினும் ஒரே அலமாரியில் ஒளியும்படி நான் செய்தேன். அப்போது தான் அவர்களிடையே காதல் ஏற்பட்டது. தற்போது அவர்கள் திருமணம் செய்து கொள்வதை நினைத்தால் மகிழ்ச்சியாக உள்ளது என்று அக்கி தெரிவித்துள்ளார்.

அசின்

அசின்

அக்ஷய் குமாரும், அசினும் சேர்ந்து கிலாடி 786 மற்றும் ஹவுஸ்ஃபுல் 2 ஆகிய படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அசின் நடித்துள்ள ஆல் இஸ் வெல் மற்றும் அக்கியின் பிரதர்ஸ் ஆகிய படங்கள் விரைவில் ரிலீஸாக உள்ளன.

English summary
Bollywood actor Akshay Kumar told how Micromax founder Rahul Sharma and actress Asin have become lovers.
Please Wait while comments are loading...