twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    2.0 பட ஐடியா எப்படி வந்தது?: ஷங்கர்

    By Siva
    |

    Recommended Video

    3.0 எடுக்க தயாராகும் ஷங்கர்- வீடியோ

    ஹைதராபாத்: 2.0 பட ஐடியா எப்படி வந்தது என்று ஷங்கர் தெரிவித்துள்ளார்.

    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள 2.0 படம் நாளை வெளியாக உள்ளது. 3டி படம், 4டி சவுண்டு என்று ரசிகர்களுக்கு புதுவித அனுபவம் கிடைக்கப் போகிறது.

    இந்நிலையில் படம் பற்றி ஷங்கர் கூறியதாவது,

    3டி

    3டி

    தற்போது அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. தொழில்நுட்பத்தை பார்த்துவிட்டு 2.0 ஆக்ஷன் படம் என்று மக்கள் நினைக்கலாம். ஆனால் நிறைய எமோஷன் உள்ள த்ரில்லர் படமே 2.0. இந்த படத்தை 3டி தொழில்நுட்பத்தில் தான் எடுக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தேன். இதனால் பட்ஜெட் பல மடங்கு உயரும் என்பது தெரியும்.

    ஐடியா

    ஐடியா

    ஒரு நாள் நிறைய செல்போன்கள் சாலையில் நடந்துபோவது போன்ற விஷுவல் என் மனக்கண்ணில் ஓடியது. அது சுவாரஸ்யமாக இருந்தது. அப்படித் தான் 2.0 படம் துவங்கியது. சமூகத்திற்கு மெசேஜ் அளிக்க வேண்டும் என்று படம் இயக்க திட்டமிட்டது இல்லை. அந்நியன் படம் பார்த்த பிறகு போக்குவரத்து விதிகளை மீறுவது இல்லை என்று பலர் எனக்கு போன் செய்து தெரிவித்தனர். அதை கேட்கவே மகிழ்ச்சியாக இருந்தது.

    விமர்சகர்

    விமர்சகர்

    என் படங்களின் சிறந்த விமர்சகர் நான் தான். ஒரு காட்சியை யோசித்து வைத்துவிட்டு என்னை நானே பார்வையாளராகவும் யோசிப்பேன். ஒரு பார்வையாளராக, ரசிகனாக எனக்கு அந்த காட்சி பிடிக்கவில்லை என்றால் அதை மாற்றிவிடுவேன். நான் இயக்குனராகவும், பார்வையாளராகவும் யோசிப்பேன். 2.0 படத்தை ஒன்றரை ஆண்டில் எடுத்து முடித்துவிட்டேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக தொழில்நுட்ப பிரச்சனைகளால் படம் தாமதமாகிவிட்டது.

    பிள்ளைகள்

    பிள்ளைகள்

    நான் வீட்டிற்கு சென்றால் வேலையை மறக்க முயற்சி செய்வேன். ஒரு மணிநேரமாவது குடும்பத்தாருடன் நேரம் செலவிடுவேன். என் பிள்ளைகள் படக்கதையை கேட்பார்கள். ஆனால் நான் சொல்ல மாட்டேன். அவர்கள் நான் செல்போனில் பேசவது, என் போனில் உள்ள புகைப்படங்களை பார்த்துவிட்டு தாமாக யூகித்து ஒரு கதை சொல்வார்கள் என்கிறார் ஷங்கர்.

    English summary
    Director Shankar has revealed as to how he got the idea of 2.0 movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X