Don't Miss!
- News
இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லை.. ஆதரவு இவருக்குத்தான்..அண்ணாமலை ஆலோசனையில் நடந்தது என்ன? பின்னணி
- Lifestyle
உங்க குழந்தைக்கு சளி, காய்ச்சல் போன்ற எந்த தொற்றுநோயும் வராமல் தடுக்க இந்த தண்ணீரை குடிச்சா போதுமாம்!
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Automobiles
பேட்டரியில் ஓடும் ஸ்கூட்டராக மாறிய பெட்ரோல் ஆக்டிவா... இவ்ளோதான் ஒட்டுமொத்த செலவேவா!!
- Sports
"இனியும் இந்தியாவை நம்ப மாட்டோம்..ரொம்ப ஏமாத்துறாங்க" டெஸ்ட் தொடர்.. ஆஸி, வீரர்கள் பரபரப்பு கருத்து
- Technology
சூரியனை தொட்டாச்சு இனி சும்மா விடுவோமா? அடுத்த ஆராய்ச்சிக்கு ரூட் போட்ட ISRO.! எல்லாமே ரெடி.!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
மனிதனை மிருகமா மாத்திடும் மணி.. துணிவு செகண்ட் சிங்கிள் ‘காசேதான் கடவுளடா’ பாடல் எப்படி இருக்கு?
சென்னை: அஜித் நடிப்பில் உருவாகி உள்ள துணிவு படத்தின் செகண்ட் சிங்கிளான காசேதான் கடவுளடா பாடல் தற்போது வெளியாகி உள்ளது.
முதல் பாடலான 'சில்லா சில்லா' பாடல் சமீபத்தில் வெளியான நிலையில், அடுத்த சிங்கிளை தயாரிப்பாளர் போனி கபூர் தற்போது வெளியிட்டுள்ளார்.
இந்த பாடலை பாடலாசிரியர் வைசாக்கே எழுதி பாடி உள்ளார். அவருடன் நாயகி மஞ்சு வாரியர் இணைந்து பாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.
லெஜெண்ட் அண்ணாச்சியை வைத்து அஜித்தை கலாய்த்த ப்ளு சட்டை மாறன்... துணிவு ஹீரோவுக்கா இந்த சோதனை?

காசேதான் கடவுளடா
ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித், மஞ்சு வாரியர், அமீர், சிபி, பாவனி, சமுத்திரகனி, ஜான் கொக்கன் நடிப்பில் உருவாகி உள்ள துணிவு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. அந்த படத்தின் செகண்ட் சிங்கிளான 'காசேதான் கடவுளடா' பாடல் தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

மனிதனை மிருகமா மாத்திடும் மணி
மனிதனை மிருகமா மாத்திடும் மணி.. கொஞ்சம் உஷாரா இல்லைன்னா காலையில இருக்காது துணி போன்ற லிரிக்ஸ் மற்றும் நாடே ஏகப்பட்ட EMIல கிடக்குது என்கிற கரன்ட்டான லிரிக்ஸ் எழுதி அசத்தியது மட்டுமின்றி இந்த பாடலையே பாடலாசிரியர் வைசாக்கே பாடி உள்ளார். அதனால் தான் இந்த பாடல் லீக் ஆகும் போது, லீக் பண்ண வேண்டாம் என்றும் அதிகம் ஷேர் பண்ண வேண்டாம் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

வாம்மா மின்னல்
சில்லா சில்லா பாடலை விட காசேதான் கடவுளடா பாடல் 3 நிமிடத்திற்கும் குறைவாகவே முடிந்து விடுகிறது. வாம்மா மின்னல் என்பது போல சட்டென தல்லால.. தல்லால.. தல்லால என வரிகள் ஓடி விடுகின்றன. அஜித்தின் நடனக் காட்சிகளும் ரொம்பவே குறைவாக உள்ளது ரசிகர்களை சற்றே ஏமாற்றி உள்ளது.

மஞ்சு வாரியர் என்ன பண்றாங்க?
துணிவு படத்தில் நானும் பாடியிருக்கேன் என சமீபத்தில் ட்வீட் போட்டு ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்திருந்தார் மஞ்சு வாரியர். ஆனால், காசேதான் கடவுளடா பாடலில் அவரது முகம் மட்டுமே லிரிக் வீடியோவில் வருகிறது. குரல் எங்கே கேட்குதுன்னே தெரியல என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். சும்மா கோரஸ் பாடி சென்றிருக்கிறார் மஞ்சு வாரியர்.
வொர்த்தா இல்லையா
சில்லா சில்லா பாடலை விட காசேதான் கடவுளடா பாடல் மிரட்டும் என வைசாக் சொன்னதற்கு காரணமும் அவர் பாடிய பாடல் என்பதால் தான் இருக்கும் என தெரிகிறது. இந்த பாடல் படத்தில் தனியாக வருமா? இல்லை படம் முடிந்ததும் வருமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. சில்லா சில்லா அளவுக்கு இல்லை அதை விட சற்றே சுமாரான பாடல் தான். இன்னமும் ஒரிஜினல் வெர்ஷன் காசேதான் கடவுளடா பாடலில் ஏகப்பட்ட சுவாரஸ்யமான வரிகளும் விஷயங்களும் நிறைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.