அரபிக்குத்து எப்படி இருக்கு... இவங்க என்ன சொல்றாங்கன்னு தெரியுமா ?
சென்னை : விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் ஃபஸ்ட் சிங்கிளான அரபிக் குத்து பாடலின் லிரிகல் வீடியோ நேற்று வெளியிடப்பட்டது. இந்த வீடியோவை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஆனால் பிரபலங்கள் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்று தெரியுமா ?
டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் நடித்துள்ள படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தை ஏப்ரல் 14 ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பீஸ்ட் ஃபஸ்ட் சிங்கிள் பிப்ரவரி 14 ம்தேதி வெளியிடப்படும் என கடந்த வாரம் சன் பிக்சர்ஸ் அறிவித்தது.

ப்ரோமோவிற்கே இவ்வளவு வ்யூ
இதற்காக ஸ்பெஷல் ப்ரோமோ ஒன்றையும் சன் பிக்சர்ஸ் வெளியிட்டது. அனிருத், நெல்சன், சிவகார்த்திகேயன் இருக்கும் இந்த வீடியோவில் விஜய்யின் வாய்ஸ் வருவது போல் அமைக்கப்பட்டிருந்தது. இந்த ப்ரோமோ வீடியோ ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. 10 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று இந்த ப்ரோமோ வீடியோ சாதனை படைத்தது.

அடேங்கப்பா...ரீச்ன்னா இப்படி இருக்கனும்
அரபிக்குத்து என பெயரிடப்பட்டுள்ள இந்த ஃபஸ்ட் சிங்கிள், ஹலமதி ஹபிப்போ என துவங்குவதாக அமைக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் எழுதிய இந்த பாடலை அனிருத் மற்றும் ஜோனிதா காந்தி பாடி உள்ளனர். இந்த பாடல் வெளியிடப்பட்ட 5 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது. 1.7 மில்லியன் லைக்குகளை பெற்றுள்ளது. இதனை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வரும் நிலையில், பிரபலங்கள் என்ன சொல்கிறார்கள் என இங்கே பார்க்கலாம்.

அட்லீ
என்னுடைய ஃபேவரைட் பாடல் வெளிவருவதற்காக நீண்ட காலம் காத்திருந்தேன். அனிருத் மாஸ் பேபி. விஜய் அண்ணா லுக் மிரட்டலா இருக்கு. டான்ஸ் மூவ்ஸ் வாவ்...தியேட்டரில் பார்க்க காத்திருக்க முடியவில்லை. நெல்சன் திலீப்குமார் அண்ணா மஸ்து மாஸ். சிவகார்த்திகேயன் சூப்பர்டா. அரபிக்ல மாசு.

அருண் விஜய்
கேரள-கொல்லம் தியேட்டரில் அரபிக்குத்து கலை கட்டுது. மாஸ் பெர்ஃபாமான்ஸ்

தர்ஷன்
அரபிக்குத்து வேற லெவல் குத்து. வாவ்வ்வ்வ்... தளபதி Full of repeat mode.சிவகார்த்திகேயன் அண்ணா லிரிக்ஸ் செம.

விக்னேஷ் சிவன்
Swaggggg maxxxx...வேற லெவல் எனர்ஜி. சூப்பர் ஃபன் வைப்ஸ் உண்டு பண்ணிட்டிங்க தளபதி விஜய் சார். தீ மோட். அரபிக் வார்த்கைளில் சூப்பரான வாய்ஸ் அனிருத். வாழ்த்துக்கள் நெல்சா.

சஞ்சய் விஜய்
தற்போதைய பார்வைகள் 10 மில்லியன் வ்யூஸ். அரபிக் குத்து வேற மாரி ரெஸ்பான்ஸ்.
Recommended Video

பரத்வாஜ்
இப்போ தான் கேட்டேன் அரபிக்குத்து. செம எனர்ஜி. பீஸ்ட் டீமுக்கு என் வாழ்த்துக்கள்.


Click it and Unblock the Notifications











