இறங்கி குத்திய கமல்...தெறிக்க விட்ட விக்ரம் ஃபர்ஸ்ட் சிங்கிள்...எப்படி இருக்கு?

சென்னை : கமல் தரலோக்கலாக இறங்கி குத்தி உள்ள விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளாக பத்தல பத்தல பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலை பற்றி ஒரு சுவாரஸ்ய அலசலை தான் இங்கு பார்க்க போகிறோம்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்துள்ள விக்ரம் படம் ஜுன் 3 ம் தேதி ரிலீசாக உள்ளது. படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ மே 15 ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கும் விழாவில் வெளியிடப்பட உள்ளது. பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்யப்பட உள்ள விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று வெளியிடப்பட்டது.

ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்படி இருக்கு

ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்படி இருக்கு

அனிருத் இசையில் கமல் எழுதி, அவரே சொந்த குரலில் பாடிய பாடல் தான் ஃபர்ஸ்ட் சிங்கிளாக வெளியிடப்பட்டுள்ளது. பத்தல பத்தல என்ற இந்த பாடல் லோக்கல் வார்த்தைகளால், அதே சமயம் கமலின் சமூக மற்றும் அரசியல் பார்வை கலந்ததாக அமைக்கப்பட்டுள்ளது. பாடல் இசையில் அனிருத் வழக்கம் போல் தெறிக்க விட்டுள்ளார். பாடலின் வரிகள் அனைவரையும் கவர்ந்துள்ளது.

என்னப்பா இப்படி ஒரு வரி

என்னப்பா இப்படி ஒரு வரி

மூன்று நிமிடம் 31 செகண்ட் கொண்ட இந்த ஃபர்ஸ்ட் சிங்கிள், கொஞ்சம் ஸ்லோ பீட்சாக இருந்தாலும், கமல் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அமைந்துள்ளது.

கல்லாவிலும் காசில்லே...கஜானாவிலும் காசில்லே...சாவி இப்போ திருடன் கையிலே...ஒன்றியத்தின் தப்பாலே...ஒன்னியும் இல்ல இப்பாலே...போன்ற வரிகள் கமலின் அரசியல் பார்வையை காட்டுகிறது.

செம ஃபார்மில் வந்த கமல்

செம ஃபார்மில் வந்த கமல்

குழந்தைகள் பாடும் Portion, கமலின் லோக்கல் ஸ்லாங் வசனம் ஆகியன ராஜா கையவச்சான், ஆழ்வார்பேட்டை ஆண்டவா பாடல்களை நினைவுபடுத்துகின்றன. கமலும், அனிருத்தும் இணைந்து பாடி உள்ள இந்த பாடல் கமல் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இந்த படம் நிச்சயம் மற்றொரு பிளாக் பஸ்டர் படமாக அமையும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அனிருத், இது கொஞ்சம் மிஸ்ஸிங்

அனிருத், இது கொஞ்சம் மிஸ்ஸிங்

விக்ரம் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியான சிறிது நேரத்திலேயே ரெக்கார்ட் பிரேக் எதுவும் பண்ணாவிட்டாலும், பக்கா டான்ஸ் நம்பராக உள்ளது. அனிருத் இசையில் ஃபயர் லைட்டா மிஸ் ஆகுறதா பெரும்பாலனவர்கள் கூறி உள்ளனர். பல இடங்களில் ரிப்பீட் மேடில் கேட்பது போன்ற உணர்வு வருகிறது. அதே சமயம் கமல் ஃபுல் ஃபாமில் சினிமாவிற்கு திரும்பி வந்துள்ளதை இது காட்டுகிறது. விக்ரம் படம் ப்ரீ ரிலீசிலேயே மிகப் பெரிய தொகையை அள்ளி வருவதால் படம் தரமான சம்பவமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X