»   »  நம்பியார்: "தயாரிப்பாளர்" ஸ்ரீகாந்துக்கு வில்லனா, ஹீரோவா?

நம்பியார்: "தயாரிப்பாளர்" ஸ்ரீகாந்துக்கு வில்லனா, ஹீரோவா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்ரீகாந்த் மிகவும் எதிர்பார்த்த நம்பியார் படம் அவருக்கு நம்பியாராகத் தான் அமைந்துவிட்டது.

புதுமுகம் கணேஷ் இயக்கத்தில் ஸ்ரீகாந்த் தயாரித்து நடித்த படம் நம்பியார். அவருக்கு ஜோடியாக சுனைனா நடித்துள்ளார். ராமு என்கிற ராமசந்திரனாக வரும் ஸ்ரீகாந்தின் கெட்ட மனசாட்சியாக நம்பியார் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சந்தானம்.


How is Sreekanth's Nambiar?

ஸ்ரீகாந்துக்கும், சந்தானத்துக்கும் ஒரே மாதிரியான உடை. சந்தானம் பெயருக்கு ஏற்றதுபோன்று கெட்ட, கெட்ட ஐடியாக்கள் கொடுத்து ஸ்ரீகாந்தை வம்பில் மாட்டிவிடுகிறார். தந்தையின் ஆசைக்காக ஐ.ஏ.எஸ். படிக்கும் ஸ்ரீகாந்துக்கு வங்கியில் வேலை செய்யும் சுனைனா மீது காதல் வருகிறது.


அவரை சுனைனாவை காதலிக்க வைப்பதே சந்தானம் தான். மனசாட்சி விஷயம் நன்றாக இருந்தாலும் அது ரசிகர்களை கவரத் தவறிவிட்டது. ஸ்ரீகாந்த் மது அருந்திவிட்டு கண்மண் தெரியாமல் குடும்பத்தாரை திட்டுவது அடிப்பது எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.


வித்தியாசமான முயற்சியை கையில் எடுத்தபோதிலும் திரைக்கதை மட்டும் ஆமை வேகத்தில் நகர்வது ரசிகர்களை எழுந்து ஓடச் செய்யும் அளவில் இருக்கிறது. ஸ்ரீகாந்தின் நண்பராக ஆர்யா வரும் காட்சிகள் கலகல.


ஸ்ரீகாந்தின் அப்பாவாக ஜெயபிரகாஷ், அம்மாவாக வனிதா, அண்ணனாக சுப்பு பஞ்சு, அண்ணியாக தேவதர்ஷினி ஆகியோர் தங்கள் கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்துள்ளனர். இசையில் விஜய் ஆண்டனி இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.


ராஜமவுலியின் சிஷ்யனான கணேஷ் புதிய முயற்சியை கையில் எடுத்து திணறியுள்ளார். சுவாரஸ்யமான கதையை திரையில் சுவாரஸ்யமாக காட்டத் தவறியுள்ளனர். நம்பியார் தயாரிப்பாளருக்கு வில்லன்.


English summary
Hero turned producer Sreekanth's Nambiar has turned villain for him.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil