»   »  வடிவேலுவின் 'எலி' எப்படி?: ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்- இது ட்விட்டர் விமர்சனம்

வடிவேலுவின் 'எலி' எப்படி?: ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்- இது ட்விட்டர் விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வடிவேலு சதாவுடன் ஜோடி சேர்ந்து நடித்த எலி படம் பற்றி ரசிகர்கள் ட்விட்டரில் பாராட்டியும், படம் சரியில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

யுவராஜ் தயாளன் இயக்கத்தில் வைகைப்புயல் வடிவேலு, சதாவுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள எலி படம் இன்று ரிலீஸாகியுள்ளது. வடிவேலுவை ரொம்ப நாட்களாக மிஸ் பண்ணிய ரசிகர்கள் இன்று அவரது எலி படத்தை பார்த்துள்ளனர்.

படம் குறித்து ரசிகர்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

எலி

மோசமான தெனாலிராமன் படத்திற்கு பிறகு வெளியாகியுள்ள எலி வடிவேலுக்கு டீசென்டான படமாக அமைந்துள்ளது. மேனரிசங்களால் வடிவேலு அசத்தியுள்ளார்..ஒரு முறை பார்க்கலாம் 3/5 என்று அரவிந்த் தெரிவித்துள்ளார்.

வடிவேலு

எலி படத்தின் முன்னோட்டத்தை பார்த்தேன். 2/5. வடிவேலு எலியாக அசத்தியுள்ளார். ஆனால் அவர் நடிப்பை தவிர எதுவும் சரியில்லை என அஜய் ட்வீட் செய்துள்ளார்.

ஹவுஸ்புல்

ஹவுஸ்புல் ஷோ. எலி படத்தை பார்க்கிறேன் என்று ட்வீட் செய்த பிரஷாந்த் படத்தை பார்த்து முடித்த பிறகு தயாரிப்பாளர்களுக்காக வருத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.

முடியலை

@itisprashanth #eli படத்தை ஃபுல்லா பார்த்தீங்கனா நீங்க ஒரு தைரியசாலி... என்னால முடியல... என்று சந்துரு ட்வீட்டியுள்ளார்.

பாவம்

#Eli -150 நிமிடங்களும் வடிவேலு தான் திரையை ஆக்கிரமித்துள்ளார். தனது குரல் மற்றும் பாடி லாங்குவேஜை வைத்து ரசிகர்களை மகிழ்விக்க முயன்றுள்ளர். ஆனால் முடியவில்லை என்று சதீஷ் தெரிவித்துள்ளார்.

தலைவலி

இந்த எலி தலைவலியை மறக்க குறைந்தது 10 மணிநேரமாவது ஆதித்யா மற்றும் சிரிப்பொலியில் வடிவேலு காமெடியை தொடர்ந்து பார்க்க வேண்டும். ஒரு ஜாம்பவானை கிண்டல் செய்துள்ளனர் என்று கூறியுள்ளார் மதராஸி.

English summary
Vadivelu's Eli hit the screens today. Eli has got mixed reviews in twitter.
Please Wait while comments are loading...