For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கேமராவில் கமல் எப்படி அத்தனை கட்டுமஸ்தாகத் தெரிகிறார் - பெர்சனல் டிரெயினர் பகிரும் சீக்ரெட்

  |

  சென்னை: விக்ரம் திரைப்படத்தில் காட்சி ஒன்றில் டிரைசப்ஸ் தசை தெரிய வேண்டுமென இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கேட்க அடுத்த 10 நிமிடங்களில் உடற்பயிற்சி செய்து முறுக்கேற்றியிருக்கிறார் கமல்ஹாசன்.

  இதனை தனியார் ஊடகப் பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் வியந்து பாராட்டிப் பேசியிருக்கிறார்.

  இந்நிலையில், கமலுக்கு ஆளவந்தான் முதல் மருதநாயகம் வரை பர்சனல் டிரெய்னராக இருந்த ஒலிம்பிய ஜெய் தனது பேஸ்புக் பக்கத்தில் இது குறித்து மேலும் சுவாரசியமான தகவல்களை வெளியிட்டிருக்கிறார்.

  என்ன சொல்றீங்க 766 கோடியா? ஐஸ்வர்யா ராய் அப்படி என்ன எல்லாம் சொத்துக்கள் வச்சிருக்காங்க தெரியுமா?என்ன சொல்றீங்க 766 கோடியா? ஐஸ்வர்யா ராய் அப்படி என்ன எல்லாம் சொத்துக்கள் வச்சிருக்காங்க தெரியுமா?

  2 மணிக்கு உடற்பயிற்சி

  2 மணிக்கு உடற்பயிற்சி

  விக்ரம் திரைப்படத்தில் ஆக்சன் காட்சி ஒன்றை நள்ளிரவு 2 மணியளவில் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அப்போது கமலின் ஆர்ம்ஸ் தெரியும் படி சட்டையை மடித்து விடச் சொல்லியிருக்கிறார். மேலும், டிரைசப்ஸ் தசை தெரிந்தால் நன்றாக இருக்குமென்றும் கூறியிருக்கிறார். அதைக் கேட்ட கமல், அப்படியா ஷூட் செய்ய இன்னும் எத்தனை நேரம் இருக்கிறது? எனக் கேட்டிருக்கிறார். இன்னும் ஒரு அரை மணி நேரம் இருக்கிறது என்று லோகேஷ் கூற, உடனே அவ்விடத்தில் இருந்து சற்று தொலைவிற்குச் சென்றிருக்கிறார் கமல். இயக்குநர் லோகேஷும் பின்னாலேயே செல்ல, அங்கு ஒரு அறையில் கமல் டிரைசப்ஸ் தசை புடைத்துக் கொண்டு வரும் படி, புஷ் அப்ஸ் செய்திருக்கிறார். ஒரு செட்டுக்கு 26 புஷ்அப்ஸ் செய்ய அதை லோகேஷும் தனது போனில் படம் பிடித்திருக்கிறார். அதன் பின்னர் ஷூட் ஆரம்பித்த போது கமலின் டிரைசப்ஸ் தசை நன்றாகப் புடைத்துக் கொண்டு தெரிந்திருக்கிறது. அதனைக் கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டிருக்கிறார் லோகேஷ். இதனை தனது பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் லோகேஷ்.

  ஆளவந்தான் முதல் ஹேராம் வரை

  ஆளவந்தான் முதல் ஹேராம் வரை

  திரைப்படங்களில் அந்தந்த கதாப்பாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் தனது உடற்கட்டை வித்தியாசமாக செதுக்கக் கூடியவர் நடிகர் கமல்ஹாசன். இன்றைய காலக்கட்டங்களில் நவீன உடற்பயிற்சிக் கருவிகளும், அதற்கேற்ப புரத உணவுகளும் சந்தையில் அதிகமாக வந்துவிட்ட நிலையில், ஒரு தசையை பெரிதாக்குவது அத்தனை கஷ்டமான காரியம் இல்லை. அதனால் இப்போது வரும் நடிகர்கள் பாடிபில்டர்கள் போல் தங்களது உடற்கட்டை மாற்றி அதையே மெயிண்டெய்ன் செய்து வருகின்றனர். ஆனால் அன்றைய காலக்கட்டத்தில் ஆளவந்தான், ஹேராம் போன்ற திரைப்படங்களில் கமல்ஹாசன் காட்டிய அந்த உடற்கட்டு, தமிழ் சினிமாவில் பலருக்கு முன்னோடியாக இருந்தது. கமல் அப்படிப்பட்ட உடற்கட்டை செதுக்க அவருக்கு பக்கபலமாக இருந்தவர்களில் ஒருவர் உடற்பயிற்சி நிபுணரும், 'எனர்ஜி' உடற்கட்டு மாத இதழின் ஆசிரியருமான ஜெயகுமார் ஒலிம்பியா ஜெய்.

  மருதநாயகம் அனுபவம்

  மருதநாயகம் அனுபவம்

  திரைப்படங்களுக்கு ஏற்ற வகையில், கமல் எடுத்த மெனக்கெடல்கள் குறித்து ஒலிம்பியா ஜெய் பல பேட்டிகளில் விவரித்திருக்கிறார். இந்நிலையில், விக்ரம் திரைப்படத்தில் கமல் எடுத்த மெனக்கெடல்கள் குறித்த லோகேஷின் பேட்டிக்கு பதிலளிக்கும் வகையில், மருதநாயகம் திரைப்படத்தின் போது கமலுடனான அனுபவங்களை ஒலிம்பியா ஜெய் பேஸ்புக்கில் நினைவு கூர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது, "படப்பிடிப்பு நடைபெற்ற அந்த ஒன்றரை மாதங்கள் முழுக்க அவர் கூடவே இருந்தேன். வடநாடு.. தென்னாடு.. கேரளாவில் உள்ள சில ஊர்கள்.. தமிழ்நாடு என்று அவருடனேயே Travel ஆகிக் கொண்டிருந்தேன். விடியற்காலை ஐந்து மணிக்கெல்லாம் உடற்பயிற்சி ஆரம்பித்துவிடும். இதுதவிர ஒருநாள் படப்பிடிப்பில் இடையிடையே என்னை அழைத்துக் கொண்டு அவர் காணாமல் போய்விடுவார். ஐந்து பத்து நிமிடங்களுக்குள் திரும்பி வந்து மறுபடியும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார். பெரும்பாலும் அந்த காட்சிகளில் அவர் இடுப்பில் ஒரு துணி மட்டுமே கட்டிக்கொண்டு மொத்த உடம்பும் கேமராவுக்கு தெரியும்படிதான் நடிப்பார். ஏனெனில் காட்சி அப்படி அமையும்படி கதை இருந்தது. இது போல் இரண்டு மூன்று முறை நாங்கள் காணாமல் போய் திரும்பி வந்த பிறகு படத்தில் நடித்துக் கொண்டிருந்த ரவிச்சந்திரன் சார் என்னிடம் தனியாகக் கேட்டார். "என்ன ஜெய் தம்பி (அவர் என்னை அப்படித்தான் கூப்பிடுவார்) நடுவுல நடுவுல காணாம போயிடறீங்க. திரும்பி வரும்போது சார் மசில்ஸ் எல்லாம் புடைச்சுகிட்டு பெருசா வராரே.. அங்கே என்ன மேஜிக் நடக்குது?

  மேஜிக் ஒண்ணும் நடக்கல. கமல் ஜி ஒரு அஞ்சு நிமிஷம் விடாமல் Body weight -லே தசைகளை Pump up செய்ற சில பயிற்சிகளை செய்வார். கேமராவில உடம்பு சும்மா கிண்ணுன்னு பதிவாகும்.

  இதேபோல ஹேராம் படத்தில் ஒரு காட்சிக்கு செஞ்சோம். அந்தணர் வேடத்தில் கையில் துப்பாக்கியுடன் நிமிர்ந்து நிற்பாரே.. அந்தக் காட்சி!" எனத் தெரிவித்திருக்கிறார்.

  ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

  ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

  ஜூன் 3-ம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கும் விக்ரம் திரைப்படத்தின் புரோமஷன் பணிகள் ஒருபுறம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், கமல் தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் காணொளி ஒன்று இன்று சமூக வலைத்தளங்களைக் கலக்கி வருகின்றது. மேடை ஒன்றில் கமல்ஹாசன் குறித்து ரசிகர்கள் பேசுகிறார்கள். சட்டென எதிர்பாராத வகையில் அவர்களின் பின்னால் தோன்றும் கமல் அவர்களை ஒரு கணம் திகைக்க வைக்கிறார். அதன் பின்னர் நெகிழ்ச்சியில் அவர்கள் செய்வதறியாது திகைக்கும் காணொளி வைரலாகி வருகின்றது.

  English summary
  How kamalhaasan seen in Cameras? Personal Trainer Sharing Secrets
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X