KPY Bala: வாரிசு நடிகர்களுக்கே நாக்கு தள்ளுது.. சாதித்து காட்டும் KPY பாலா.. போட்றா நீ சிங்கம் தான் BGM

சென்னை: நெபுடிசம் என்பது இந்தியா முழுவதும் உள்ள திரை உலகங்களில் உள்ளது. அதற்கு குறிப்பிட்ட சினிமா உலகம் விதிவிலக்கு என்று எதையும் சுட்டிக் காட்டி விட முடியாது. அதே நேரத்தில் நெபோ - கிட் என்று சொல்லப்படுபவர்கள் பலரும் சினிமாவில் கால் பதிக்க ஆசைப்பட்டு, முதல் படத்திலேயே பல்பு வாங்கி உள்ளார்கள். அதே நேரத்தில் KPY பாலா எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் கதாநாயகனாக நடித்து முதல் படத்திலேயே தனது கொடியை பறக்க வைத்துள்ளார். அப்படி கடந்த ஒரு ஆண்டு காலத்திற்குள்ளாகவே பல்பு வாங்கிய திரைப்பிரபலங்களின் வாரிசு நடிகர்கள் யார் யார் என்பது குறித்தும் அவர்களில் இருந்து பாலா எப்படி மொத்தமாக மாறி நிற்கிறார் என்பது குறித்தும் இந்த தொகுப்பில் காணலாம்.

மறைந்த நடிகர் இதயம் முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளி 'நேசிப்பாயா' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படத்தை பிரபல இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கினார். படத்தின் புரோமோசனுக்கு நடிகை நயன்தாரா எல்லாம் கலந்து கொண்டார். ஆனால் படம் ஒர்க் அவுட் ஆகவில்லை. முரளியின் மகன், அதர்வாவின் தம்பி என்ற காரணத்திற்காக படம் ஓடாது என்ற நிதர்சனம் படக்குழுவினரே யோசித்திருக்க வேண்டியது. படம் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வரவேற்பை பெறவில்லை. படம் பிளாஃப்.

அதேபோல் தமிழ் சினிமாவில் பல வெள்ளி விழா படங்களை கொடுத்த இயக்குநர் விக்ரமனின் மகன், விஜய் கனிஷ்கா கதாநாயகனாக ' ஹிட் லிஸ்ட்' படத்தில் அறிமுகமானார். படத்தில் சரத்குமார், கௌதம் வாசுதேவ் மேனன் என பலரும் நடித்திருந்தார்கள். படம் கடந்த ஆண்டு வெளியானது. ஆனால் இந்த படம் விஜய் கனிஷ்காவுக்கு பெரிய ஓபனிங்கைக் கொடுக்கவில்லை. படம் தமிழ், தெலுங்கு என எங்கேயும் பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆகவில்லை. படம் வணிக ரீதியாக தோல்விப் படம் என்று திரையுலகில் பேச்சுகள் அடிபடுகிறது.

How KPY Bala Gives Box Office Hit His Debut Gandhi Kannadi Why Its Not Works Other Nepo Kids
Photo Credit:

தனுஷ் அக்கா மகன்: நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தில் கதாநாயகனாக நடித்தவர் அவரது அக்காவின் மகன் பவீஷ். இந்த படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. படத்தின் கதைக்கு பவீஷ் ஓரளவுக்கு ஓ.கே.வான கதாநாயகன் தான் என்றாலும், திருப்தியைக் கொடுக்கும் நடிப்பு அவரிடத்தில் இருந்து வெளிப்படவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். படமும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

விஜய் சேதுபதி மகன்: இந்த லிஸ்ட்டில் மற்றவர்களைக் காட்டிலும் அதிக அடி வாங்கியவர் என்றால் அது விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி தான். இவரது 'ஃபீனிக்ஸ்' படத்தின் ரிலீஸ்க்கு முன்னரே அவர் செய்த சில நடவடிக்கைகள் பேச்சுகள் பெரும் விமர்சனங்களுக்கு ஆளானது. இந்த படம் வணிக ரீதியாக வெற்றிப் படம் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. வணிக ரீதியாக பெற்ற வெற்றியாலும் சூர்யா சேதுபதிக்கு பெரிய அளவில் மக்கள் செல்வாக்கை பெற்றுத் தரவில்லை என்பது நிதர்சனம்.

Take a Poll

அகல கால்: மேலே குறிப்பிட்ட வாரிசு நடிகர்களின் படங்கள் அவர்களுக்கு எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றுக் கொடுக்காமலும், மக்கள் செல்வாக்கை உருவாக்கிக் கொடுக்காமலும் போனதற்கு காரணம், அகல கால் வைத்தது என்று கூட கூறலாம். இத்தனைக்கும் பெரிய நடிகர்களின் ரிலீஸ் தேதியில் படத்தை ரிலீஸ் செய்யாமல் சின்ன பட்ஜெட் படங்களுடன் தான் இவை மோதின. அப்படி இருந்தும் பெரிய வெற்றி என்பது கிடைக்கவில்லை.

How KPY Bala Gives Box Office Hit His Debut Gandhi Kannadi Why Its Not Works Other Nepo Kids
Photo Credit:

இதுவா காரணம்: இவர்களுக்கு வெற்றி என்பது சாத்தியமற்றது என்று பொருள் அல்ல. மாறாக தொடக்கத்திலேயே தங்களது திறமையை துணை கதாநாயகன், குணச்சித்திர நடிகர்கள் போன்று நடித்து மக்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை எட்டி இருக்கலாம். காலம் அமையும் அமையும் போது சரியான கதையுடன் களமிறங்கி இருக்கலாம். உதாரணமாக அர்ஜுன் தாஸைக் கூறலாம். KPY பாலாவும் இந்த ரகம் தான். சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல், கதாநாயகனாக கால் பதித்த முதல் படத்தை சிவகார்த்திகேயன் போன்ற பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுக்கும் நடிகரின் படம் வெளியாகும் தினத்தில் படத்தை ரிலீஸ் செய்து, அதில் வணிக வெற்றியையும் சாத்தியப்படுத்தி உள்ளார் KPY பாலா.

நீ சிங்கம் தான் பாலா: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த பாலா, பல படங்களில் காமெடியன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவர் முதன் முதலாக கதாநாயகனாக நடித்து வெளியான படம் காந்தி கண்ணாடி. தனது முதல் படத்திலேயே கோடிக் கணக்கில் வசூலை எட்டியுள்ளார் KPY பாலா. கதாநாயகனாக KPY பாலா செய்ததை பல வாரிசு நடிகர்கள் கூட செய்ய முடியவில்லை. தமிழ் சினிமாவும் சரி தமிழ் சினிமா ரசிகர்களும் சரி சரியான நபர்களை, சரியான படங்களை பெரும்பாலும் கை விட்டது இல்லை. அப்படி கை விடப்படாத கதாநாயகன் பாலாவும் அவரது முதல் படமான காந்தி கண்ணாடி படமும் பட்டியலில் சேர்ந்து கொண்டுள்ளது. 'நீ சிங்கம் தான் BGM' உங்களின் வளர்ச்சிக்கு சரியாக பொருந்திப் போகிறது, வாழ்த்துகள் பாலா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X