»   »  புஷ்பா புருஷன் சூரி சாப்பிட்ட பரோட்டா எத்தனை தெரியுமா?

புஷ்பா புருஷன் சூரி சாப்பிட்ட பரோட்டா எத்தனை தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சில நடிகர்களின் பெயரின் முன்பாக அவர்கள் நடித்த முதல் படங்களின் பெயர்கள் ஒட்டிக்கொள்ளும், நிழல்கள் ரவி, ஜெயம் ரவி இதற்கு உதாரணம். ஆனால் பரோட்டா சாப்பிடுவது போல நடித்த சூரிக்கு பரோட்டா என்ற பெயர் ஒட்டிக்கொண்டது. இப்போது வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா புருஷனாக நடித்திருக்கிறார் சூரி.

வெண்ணிலா கபடி குழு படத்தில் 50 பரோட்டா சாப்பிடும் காட்சியில் நடித்த காமெடி நடிகர் சூரி எத்தனை புரோட்டா சாப்பிட்டார் என்பது குறித்த உண்மை தற்போது வெளியாகியுள்ளது.

How much parota ate by Actor Soori

வெண்ணிலா கபடி குழு படத்தின் காட்சிப்படி 50 புரோட்டா சாப்பிடுவதாக சவாலை ஏற்று அதில் களமிறங்குவார் சூரி. இதைத் தொடர்ந்து அவருக்கு புரோட்டாக்கள் பரிமாற, ஒரு கட்டத்தில் 50 புரோட்டா சாப்பிட்டு முடித்ததாக ஹோட்டல் ஊழியரிடம் தெரிவிப்பார்.

ஆனால், அந்த ஓட்டல் ஊழியர் கோட்டை சரியாக போடாமல் 42 தான் சாப்பிட்டதாக தப்பாக கணக்கு காட்டுவார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட, கோட்டை பூராவும் அழி மறுபடியும் முதல்ல இருந்து சாப்பிடுவோம் என்று மீண்டும் 50 புரோட்டா சாப்பிட தயாராவார் சூரி. இதில் பயந்து போன ஓட்டல் ஊழியர் தோல்வியை ஒப்புக்கொள்வார்.

பட்டி, தொட்டி எல்லாம் மிகவும் பிரபலமான இந்த காட்சி மூலம் அவர் பரோட்டா சூரி என்றே ரசிகர்கள் பெயர் வைத்து அழைத்தனர். ஆனால், உண்மையில் அவர் எத்தனை பரோட்டா சாப்பிட்டார் என்பது குறித்த கேள்வி பலரது மனத்திலும் நிலவி வந்தது. அதற்கு சூரியே தற்போது விளக்கமளித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தின் மூலம் ரசிகர்களுடன் கலந்துரையாடிய சூரி, இந்த உண்மையை தெரிவித்துள்ளார். ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த சூரி, வெண்ணிலா கபடி குழு படத்தில் தான் 17 பரோட்டாக்கள் சாப்பிட்டதாக கூறியுள்ளார்.

English summary
Parota soori answer how much parota ate in Vennila kabadi kuzhu movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil