»   »  விஜயகாந்த் வந்தப்பவும் கடன்.. விஷால் வந்த பிறகும் கடன்.. நடிகர் சங்கத்திற்கு ஏன் இவ்வளவு கடன்கள்?

விஜயகாந்த் வந்தப்பவும் கடன்.. விஷால் வந்த பிறகும் கடன்.. நடிகர் சங்கத்திற்கு ஏன் இவ்வளவு கடன்கள்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

தொன்னூறுகளில் இருந்த நடிகர் சங்க நிர்வாகிகளைப் பார்த்தவர்களுக்கு நன்றாகத் தெரிந்த ஒரு விஷயம் நடிகர் சங்கக் கடன். அந்தக் கடன் வட்டிக்கு மேல் வட்டி குட்டிபோட்டு ரூ 4 கோடியானது.

வட்டியை ஓரளவுக்கு குறைக்கச் சொல்லிப் போராடிய அப்போதைய விஜயகாந்த் தலைமையிலான நிர்வாகிகள், கலை நிகழ்ச்சி நடத்தி பணம் திரட்டி அந்தக் கடனை அடைத்தனர். பெரும்பாலானோருக்கு இந்த விஷயம் தெரியும்.

How Nadigar Sangam incurs crores of Debt?

அந்தக் கடன் ஏன் ஏற்பட்டது? என்பது பலருக்கும் தெரியாது. அந்தக் கடனுக்கான காரணம் இதே நடிகர் சங்கக் கட்டடம்தான்.

1952-ல் வள்ளலாக வாழ்ந்த கலைவாணரால் தொடங்கப்பட்டது நடிகர் சங்கம். அந்த சங்கத்துக்காக இப்போதுள்ள 19 ஏக்கர் நிலத்தை எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்டோரின் துணையுடன் வாங்கியவர் கலைவாணர்.

இந்த இடத்தில் ஒரு கட்டடம் கட்ட வேண்டும் என்று முடிவானதும் அதற்கான பணம் ரூ 1 கோடியை வங்கியில் பெற்றனர்.

சுவாமி சங்கரதாஸ் கலையரங்கம் என்ற பெயரில் ஒரு கட்டடம் கட்டினர். இந்தக் கட்டடத்துக்காக வாங்கிய கடன்தான் குட்டி மேல் குட்டி போட்டு ரூ 4 கோடியாக உயர்ந்து நின்றது.

சரி, அந்தக் கடன்தான் தீர்ந்துவிட்டதே... இப்போது எப்படி ரூ 2 கோடி கடன் வந்தது? என்றால், அதற்கும் இதே நடிகர் சங்கக் கட்டடம்தான் காரணம்.

சுவாமி சங்கரதாஸ் சுவாமி கலையரங்கம்தான் பழசாகிவிட்டதே... இன்றைய தேவைக்கு ஏற்ற மாதிரி ஒரு பிரமாண்ட மல்டிப்ளெக்ஸ் கட்ட முயன்றனர் சரத்குமார் அணியினர். அதற்கு கைகொடுக்க வந்தது சத்யம் சினிமாஸ். எல்லோரிடமும் ஒப்புதல் பெற்றே இந்த முயற்சியை மேற்கொண்டார் சரத்குமார்.

ஆனால் கட்டடம் இடிக்கும் வரை அமைதி காத்தவர்கள், இடிக்கப்பட்ட பிறகு தனி அணியாக விஷால் தலைமையில் திரண்டு, சத்யம் சினிமாஸுக்கு இடத்தை லீசுக்கு தரவே கூடாது என்றனர்.

ஆனால் அதற்குள், பழைய கட்டடத்தை இடிக்க ஆன செலவு, புது கட்டடம் கட்டும் பூர்வாங்க வேலைகளுக்கான செலவு, முத்திரைத் தாள் வரி என சத்யம்காரர்கள் கோடிகளை வாரியிறைத்திருந்தனர்.

விஷால் அணி ஜெயித்து வந்த பிறகு, நிலத்தை மீண்டும் சத்யம் நிறுவனத்திடம் கேட்க, அவர்களும் பெருந்தன்மையுடன் ஒப்புக் கொண்டார்கள். ஆனால் செலவு செய்த பணத்தை யார் தருவார்கள்?

அதற்காக வாங்கப்பட்ட கடன்தான் இந்த ரூ 2 கோடி!

இந்தக் கடன் நியாயமானதுதானா.. தவறானதா என்பதைத் தீர்மானிப்பதை அவரவர் சொந்த விருப்பத்துக்கு விட்டுவிடலாம்.. ஆனா மறுபடியும் "கைமாத்து" என்று கிளம்பாமல் இருந்தால் சரித்தான்!

English summary
Here is the flashback of how Nadigar Sangam incurred crores of debts during Vijayakanth and Vishal terms.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil