கன்ஃபெஷன் ரூமில் பிக் பாஸ் சொன்ன அந்த விஷயம்.. உடனே தலைமுடியை வெட்ட சம்மதித்த நிரூப்!
சென்னை: நிரூப்பின் புதிய ஹேர்ஸ்டைலை விஜய் டிவி ட்வீட் போட்டு செலிபிரேட் பண்ண நிலையில், நெட்டிசன்கள் இப்போது மட்டும் நிரூப் ஏன்? முடியை வெட்டிக் கொண்டார் என்கிற கேள்விகளை கிளப்பின.
எதற்கும் எபிசோடு பார்த்து முடிவு பண்ணலாம் என ரசிகர்கள் இருந்த நிலையில் நிரூப் ஏன் தலைமுடியை வெட்ட சம்மதித்தார் என்பதற்கான பதில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
சிகை அலங்காரம் செய்து கொள்ளலாம் என பிக் பாஸ் சொன்னதும் நிரூப் சென்று அந்த சேரில் அமர்ந்தது ரசிகர்களை முதலில் ஷாக் ஆக்கியது.

ஹேர் ஸ்டைலிஸ்ட்
பிக் பாஸ் போட்டியாளர்களை கிராண்ட் ஃபினாலேவுக்குத் தயார் செய்யும் ஏற்பாடு இன்று நடந்தது. போட்டியாளர்களை அழகுப்படுத்த நிபுணர்கள் உரிய கவச உடைகளுடன் உள்ளே நுழைந்தனர். பிரியங்கா, நிரூப், ராஜு, அமீர் மற்றும் பாவனி உடனடியாக தங்களை தயார் செய்து கொள்ளும் பணியில் இறங்கினர்.

ரசிகர்கள் ஷாக்
என்ன நிரூப் எதுவுமே சொல்லாமல் போய் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அவருக்கும் மற்றவர்களை போல ஹேர்கட் செய்து விடுகிறார்களே என ரசிகர்கள் சற்றே குழம்பிப் போய் பார்த்தார்கள். ஆனால், சட்டென அந்த காட்சியில் இருந்து ஜம்ப் கட் செய்ததை போல நிரூப் கன்ஃபெஷன் அறைக்குள் பிக் பாஸ் உடன் பேசிக் கொண்டிருந்தார்.

முடி வெட்டமாட்டேன்
தலைமுடியை வெட்டிக் கொள்ள மாட்டேன் என் நிரூப் சொல்லி விட்டு அங்கிருந்து வெளியேறிய நிலையில் தான் பிக் பாஸ் கன்ஃபெஷன் ரூமிற்குள் அழைத்து சிகை அலங்காரம் செய்து கொள்ள அறிவுறுத்தினார். ஆனால், என் முடியை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கவே வைத்திருக்கிறேன் என நிரூப் மறுத்தார்.

பத்திரப்படுத்தி வைக்கலாம்
நிரூப்பின் பேச்சை கருத்தில் கொண்ட பிக் பாஸ் உங்கள் முடியை பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளலாம். நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் போது அதை நீங்கள் என்ன செய்ய விரும்புறீங்களோ அப்படியே பண்ணிக்கலாம் என பிக் பாஸ் சொன்னதும் தான் நிரூப் தலைமுடியை வெட்டிக் கொள்ள சம்மதித்தார்.

பாவனி முத்தம்
நீண்ட தலைமுடியுடன் இருந்த நிரூப்பை பிரியங்கா காட்டான் என சொல்லி கலாய்த்து வந்தார். ஹேண்ட்ஸம் ஹங்காக மாறி வெளியே வந்த நிரூப்பை பார்த்து பிரியங்கா எவ்ளோ அழகா இருக்கான் இவன் என அப்படியே அசடு வழிந்தார். நிரூப்பின் அழகில் மயங்கிய பாவனி கன்னத்திலேயே முத்தம் கொடுத்த கண் கொள்ளா காட்சிகள் எல்லாம் அரங்கேறின.
Recommended Video

ஸ்பெஷல் கவனிப்பு
கடந்த சில வாரங்களாகவே நிரூப்புக்கு மட்டும் பிக் பாஸில் ஏகப்பட்ட ஸ்பெஷல் கவனிப்புகள் இருப்பதாக பிக் பாஸ் ரசிகர்கள் குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வருகின்றனர். இதே முடிக்காக அபிநய் உடன் அப்படி சண்டை போட்ட நிரூப் இப்போ மட்டும் வெட்டிக் கொண்டது சிம்பதி க்ரியேட் பண்ணி ஓட்டுக்களை குவிக்கவே என்றும் விஜய் டிவி வேறு ஏதாவது பிளான் செய்கிறதா? என்றும் நெட்டிசன்கள் சந்தேகங்களை கிளப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











