»   »  கடும் எதிர்ப்பு அலைக்கு மத்தியிலும் அமோகமாக விஷால் அணி வென்றது எப்படி?

கடும் எதிர்ப்பு அலைக்கு மத்தியிலும் அமோகமாக விஷால் அணி வென்றது எப்படி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால் அணி இப்படி ஒரு வெற்றியைப் பெறும் என்பதை பலரும் எதிர்ப்பார்க்கவில்லை. கிட்டத்தட்ட ஒரு திகைப்பான நிலைதான் தமிழ் திரையுலகினருக்கு.

காரணம் அவருக்கு இருந்த எதிர்ப்பலை அப்படி. சக நடிகர்கள், திரைக் கலைஞர்கள் பலரும் விஷாலுக்கு தேவையில்லாத வேலை இது என்றே கூறி வந்தனர். நடிகர் சங்கத்தில் பதவியில் இருக்கும் இவருக்கு தயாரிப்பாளர் சங்கம் எதற்கு என்றெல்லாம் கேட்டனர். மீடியாவிலும்கூட விஷாலுக்கு எதிரான செய்திகளே அதிகம் வந்து கொண்டிருந்தன.

How Vishal team gains a big win amidst hate wave?

ஆரம்பத்தில் 5 அணிகளாக நின்ற தயாரிப்பாளர்கள், விஷாலை பொது எதிரியாக வைத்து 3 அணிகளாக மாறினர். இரண்டு தலைவர் வேட்பாளர்கள், டி சிவா, கலைப்புலி சேகரன் ஆகியோர் வாபஸ் பெற்று ராதாகிருஷ்ணனை ஆதரித்தனர். இருந்தும் விஷால் அணி பெரும் வெற்றிப் பெற்றுவிட்டது.

ஆரம்பத்திலிருந்தே விஷால் அணி சத்தமின்றி ஒரு வேலைப் பார்த்தது. அதை மற்ற இரு அணிகளும் பெரிதாக எடுத்துக் கொள்ளவே இல்லை.

அதாவது, சினிமா தயாரித்து நொடித்துப் போய் அல்லது இனி தயாரிப்பில் ஈடுபட வேண்டாம் என்ற முடிவோடு தங்கள் சொந்த ஊர்களில் செட்டிலாகிவிட்ட தயாரிப்பாளர்களை தேடிப் போய் பார்த்தார் விஷால். அவரது அணியில் பிரபலமாக இருந்த பிரகாஷ் ராஜ், கவுதம் மேனன் உள்ளிட்ட பலரும் நேரில் போய்ப் பார்த்தனர். பல வாக்குறுதிகளை அளித்தனர். இந்த வாக்குறுதிகளை விட, ஒரு பிரபல நடிகர் தங்களைத் தேடி வந்தது அந்த தயாரிப்பாளர்களுக்கு ஒரு நிறைவைத் தந்தது. ஆனால் மற்ற இரு அணிகளும் அதை ஒரு விஷயமாகவே எடுத்துக் கொள்ளவில்லை. இவர்கள் வாக்களிக்க வருவார்கள் என்பதையும் நம்பவில்லை.

ஆனால் நடந்தது வேறு. இந்த சிறு தயாரிப்பாளர்கள் மொத்தமாக சென்னைக்குக் கிளம்பி வந்து வாக்களித்து, எல்லார் எதிர்ப்பார்ப்பையும் மொத்தமாக மாற்றி விட்டனர்.

சங்கத்தில் வாக்களிக்கும் தகுதியுள்ளவர்கள் 1212 பேர். இவர்களில் 1059 பேர் நேற்று வாக்களித்தனர். இந்த அளவு வாக்குப் பதிவு நடந்தது இதுவே முதல்முறை. இந்த விகிதத்தைப் பார்த்ததுமே, பலரும் விஷால் அணிக்கு வாய்ப்பிருப்பதாகக் கூற ஆரம்பித்துவிட்டனர். அதுதான் நடந்தது.

கிட்டத்தட்ட 600 தயாரிப்பாளர்கள் எதிர்த்து வாக்களித்தும் (ராதாகிருஷ்ணன், கேயார் அணிகள்), 476 வாக்குகள் பெற்ற விஷால் தலைவராகிவிட்டார். காரணம் வெளியூர் மற்றும் சிறு படத் தயாரிப்பாளர்களே.

English summary
Amidst big opposition among film industry people, Vishal and his team gained a big win in producers council election.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil