»   »  வக்கீல் நோட்டீஸ், காரசார பேட்டிகள்: மல்லுக்கட்டும் ரித்திக் ரோஷன், கங்கனா ரனாவத்

வக்கீல் நோட்டீஸ், காரசார பேட்டிகள்: மல்லுக்கட்டும் ரித்திக் ரோஷன், கங்கனா ரனாவத்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: முன்னாள் காதலர்களான ரித்திக் ரோஷனும், கங்கனா ரனாவத்தும் ஒருவருக்கு ஒருவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனும், நடிகை கங்கனா ரனாவத்தும் காதலித்து பிரிந்துவிட்டனர். ரித்திக் கங்கனாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பாரீஸில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கங்கனா இளம் ஹீரோ ஒருவருடன் நெருக்கமானதால் ரித்திக் கடுப்பானதாக தகவல் வெளியாகியுள்ளன.

கத்ரீனா கைஃப்

கத்ரீனா கைஃப்

ரித்திக் ரோஷன் கங்கனாவை திருமணம் செய்யாததற்கு நடிகை கத்ரீனா கைஃப் தான் காரணம் என்று கூறப்படுகிறது. கத்ரீனா ரித்திக்குடன் ஓவர் நெருக்கம் காட்டியதால் அவர் கங்கனாவை திருமணம் செய்யவில்லை என்று பாலிவுட்டில் பேச்சாக கிடக்கிறது.

சண்டை

சண்டை

கங்கனா பேட்டி ஒன்றில் சில்லறைத்தனமான முன்னாள் காதலர் என்று தெரிவித்தார். இதனால் கோபம் அடைந்த ரித்திக் ரோஷன் கங்கனாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி மன்னிப்பு கேட்குமாறு கூறினார்.

பதிலுக்கு நோட்டீஸ்

பதிலுக்கு நோட்டீஸ்

ரித்திக்கின் நோட்டீஸை பார்த்த கங்கனா டென்ஷனாகி தனது வக்கீல் மூலம் 21 பக்கம் கொண்ட நோட்டீஸை ரித்திக்கிற்கு அனுப்பினார். ரித்திக் தன்னை மிரட்டியதாக கங்கனா தெரிவித்து நோட்டீஸ் அனுப்பினார்.

இமெயில்

இமெயில்

கங்கனா ரித்திக் ரோஷன் என நினைத்து ஒரு இமெயில் முகவரிக்கு புகைப்படங்கள், காதல் வார்த்தைகளை அனுப்பி வந்துள்ளார். அதில் சில கசிந்துவிட்டதாம். இதற்கு ரித்திக் தான் காரணம் என்கிறார் கங்கனா.

ரித்திக்

ரித்திக்

யாரோ ஒருவர் என் பெயரில் இமெயில் முகவரி வைத்து என் ரசிகர்கள் மற்றும் ஒரு இளம்பெண்ணுடன்(கங்கனா) தொடர்பில் இருந்துள்ளார். அது நான் இல்லை. இது குறித்து சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளேன் என ரித்திக் தெரிவித்துள்ளார்.

English summary
Fight between former lovers Hrithik Roshan and Kangana Ranaut is getting ugly day by day.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil