நீங்க பார்ட்டி பண்ணுங்க.. நான் டேட்டிங் பண்றேன்.. ஹ்ரித்திக் ரோஷன் காதலியுடன் செம சேட்டை!

மும்பை: நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் அவரது ரூமர் கேர்ள் ஃபிரெண்ட் இருவரும் கரண் ஜோஹரின் 50வது பிறந்தநாள் பார்ட்டிக்கு ஜோடி போட்டு சென்றது தான் பாலிவுட்டில் தற்போது ஹாட் டாபிக்.

முதல் மனைவி சுசானா கானை விவாகரத்து செய்த நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் தற்போது பாலிவுட்டின் இளம் நடிகையான சபா ஆசாத்துடன் டேட்ட்டிங் செய்து வருவதாக போட்டோக்கள் மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் வெளியாகி உள்ளன.

விக்ரம் வேதா இந்தி ரீமேக்கில் நடித்து வரும் ஹ்ரித்திக் ரோஷனும் சதா சபா ஹாசாத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே வலம் வருகிறார் என்றும் பாலிவுட் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

டாப் ஹீரோ

டாப் ஹீரோ

பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷனுக்கு 48 வயதாகிறது. பிரபல பாலிவுட் இயக்குநர் ராகேஷ் ரோஷனின் மகனான ஹிரித்திக் ரோஷன் அப்பாவின் படங்களில் சிறு வயதில் இருந்தே குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். 2000ம் ஆண்டு வெளியான கஹோ நா பியார் ஹை படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமானார். இவர் நடிப்பில் வெளியான க்ரிஷ் மற்றும் தூம் 2 படங்கள் உலகளவில் சூப்பர் ஹிட் அடித்தன.

காதல் திருமணம்

காதல் திருமணம்

ஹீரோவாக அறிமுகமான 2000ம் ஆண்டே சுசானா கான் உடன் ஹ்ரித்திக் ரோஷனுக்கு திருமணம் நடைபெற்றது. ஹ்ரேஹன் ரோஷன் (16 வயது), ஹ்ரிதன் ரோஷன் (14 வயது) என இரு மகன்கள் ஹ்ரித்திக் ரோஷனுக்கு உள்ளனர். பாலிவுட் நடிகைகளுடன் ஹ்ரித்திக் ரோஷனுக்கு தொடர்பு இருப்பதாக எழுந்த குடும்ப சண்டை காரணமாக கடந்த 2014ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட சுசானா கானை விவாகரத்து செய்து பிரிந்தார் ஹ்ரித்திக் ரோஷன்.

நடிகையுடன் டேட்டிங்

நடிகையுடன் டேட்டிங்

இந்நிலையில், சபா ஆசாத் எனும் 31 வயது இளம் பாலிவுட் நடிகையுடன் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் டேட்டிங் செய்து வருவதாகவும், இருவரும் இணைந்து ஒன்றாக ஹோட்டல், பார்ட்டி என சுற்றி வரும் புகைப்படங்களுடன் பாலிவுட்டில் பரபரப்பு தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால், இதை இருவருமே இதுவரை மறுக்கவே இல்லை.

பார்ட்டியில் ஜோடி போட்டு

பார்ட்டியில் ஜோடி போட்டு

இந்நிலையில், நேற்று இரவு நடைபெற்ற பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோஹரின் 50வது பிறந்தநாள் பார்ட்டியில் சபா ஆசாத் உடன் ஹ்ரித்திக் ரோஷன் செம ஹேண்ட்ஸமாக கலந்து கொண்டது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. வெளிப்படையாக ஹ்ரித்திக் ரோஷன் தனது காதலை கன்ஃபார்ம் செய்து விட்டார் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

விரைவில் திருமணம்

விரைவில் திருமணம்

மேலும், இருவரது உறவும் ரொம்பவே நெருக்கம் அடைந்துள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் இருவரும் அதிகாரப்பூர்வமாக தங்கள் திருமணத்தை அறிவிக்கப் போகிறார்கள் என்றும் அதற்கு ஒரு முன் உதாரணமாகவே நேற்று நடந்த பார்ட்டியில் இருவரும் ஜோடி போட்டு கலந்து கொண்டனர் எனக் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X