»   »  ரூ. 60 கோடி கேட்ட ஹீரோ, ஆளையே மாற்றிய இயக்குனர்: இது எப்படி இருக்கு?

ரூ. 60 கோடி கேட்ட ஹீரோ, ஆளையே மாற்றிய இயக்குனர்: இது எப்படி இருக்கு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தக் படத்தில் நடிக்க ரித்திக் ரோஷன் ரூ.60 கோடி கேட்டதால் தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ரா ஹீரோவையே மாற்றிவிட்டார்.

யஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் கிருஷ்ண ஆச்சார்யா இயக்கத்தில் தக் என்ற இந்தி படம் உருவாக உள்ளது. யஷ் ராஜ் தயாரிப்பில் நடிப்பதற்கு முன்னணி ஹீரோக்கள் முதல் அனைவருமே விரும்புவார்கள்.

இந்நிலையில் தான் ரித்திக் ரோஷனுக்கு தக் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ரூ. 60 கோடி

ரூ. 60 கோடி

தக் படத்தில் நடிக்க ரூ. 60 கோடி சம்பளம் வேண்டும் என்று ரித்திக் ரோஷன் கேட்டுள்ளார். ரூ. 60 கோடி அதிகம் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள் என்று ஆதித்யா கூறியும் அவர் கேட்கவில்லை.

ஆமீர் கான்

ஆமீர் கான்

ரித்திக் ரோஷனுக்கு ரூ.60 கோடி சம்பளத்தை அள்ளிக் கொடுப்பது தேவையில்லாதது என்று நினைத்த ஆதித்யா சோப்ரா ஹீரோவையே மாற்றிவிட்டார். தற்போது தக் படத்தில் நடிக்க உள்ளது ஆமீர் கான்.

ரித்திக்

ரித்திக்

பாலிவுட்டின் பெரிய ஹீரோக்களான கான்கள் படத்தின் சம்பளத்தை முழுதாக வாங்காமல் லாப, நஷ்டத்திலும் பங்கேற்கிறார்கள். அப்படி இருக்கும்போது ரித்திக் லாப, நஷ்டத்தில் பங்கேற்காமல் மொத்தமாக சம்பளம் கேட்டுள்ளார்.

தேவையில்லை

தேவையில்லை

ரித்திக் ரோஷனின் அண்மைகால படங்கள் ஓடவில்லை. இந்நிலையில் அவருக்கு மொத்தமாக சம்பளத்தை கொடுத்து படம் ஓடாவிட்டால் அது வீண் என்று நினைத்துள்ளார் ஆதித்யா சோப்ரா.

English summary
Producer cum director Aditya Chopra changed his Thug movie hero after Hrithik Roshan reportedly asked Rs. 60 crore.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil