»   »  6 படங்கள் 550 கோடி... சாட்டிலைட் ரைட்ஸில் சல்மான் கானை 'ஓவர்டேக்' செய்த ஹிருத்திக்ரோஷன்!

6 படங்கள் 550 கோடி... சாட்டிலைட் ரைட்ஸில் சல்மான் கானை 'ஓவர்டேக்' செய்த ஹிருத்திக்ரோஷன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனின் அடுத்த 6 படங்களுக்கான சாட்டிலைட் உரிமை சுமார் 550 கோடிகளுக்கு விலை போயிருக்கிறது.

சல்மான் கான், ஷாரூக்கான், அமீர் கான் என முப்பெரும் கான்களின் ஆதிக்கத்தையும் மீறி பாலிவுட் உலகில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் ஹிருத்திக்ரோஷன்.

Hrithik Roshan beats Salman Khan satellite rights Record

'அக்னிபாத்', 'பேங் பேங்', 'கிரிஷ் 3' என தொடர்ச்சியாக ஹிருத்திக் படங்கள் நல்ல வசூலைக் குவித்து வருகின்றன.இதனால் அவரின் அடுத்தடுத்த படங்களுக்கு பாலிவுட் உலகில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஹிருத்திக் ரோஷனின் அடுத்த 6 படங்களுக்கான சாட்டிலைட் உரிமையை, 550 கோடிகளைக் கொடுத்து வாங்கியிருக்கிறதாம்.

இதற்கு முன் சல்மான் கானின் நடிப்பில் 2013-2017 வரை வெளியாகும் படங்களின் சாட்டிலைட் உரிமை 500 கோடிகளுக்கு விலை போனது.தற்போது ஹிருத்திக் ரோஷன் சல்மானின் சாட்டிலைட் வரலாற்றை முறியடித்திருக்கிறார்.

ஹிருத்திக் நடிப்பில் அடுத்ததாக 'மொகஞ்சதாரோ', 'காபில்' ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன. காபில் படத்தில் கண்பார்வையற்ற மனிதராக ஹிருத்திக்ரோஷன் நடிக்கவிருக்கிறார்.

English summary
Hrithik Roshan Upcoming Films satellite rights sold Rs.550 Crores.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil