»   »  என் புகைப்படங்களை தவறாக பயன்படுத்தினார் - ஹிருத்திக் மீது கங்கனா ரணாவத் புகார்

என் புகைப்படங்களை தவறாக பயன்படுத்தினார் - ஹிருத்திக் மீது கங்கனா ரணாவத் புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகரான ஹிருத்திக் ரோஷன் மீது நடிகை கங்கனா ரணாவத் மும்பை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.

தன்னுடைய தனிப்பட்ட புகைப்படங்களையும், மெயில்களையும் ஊடகங்களிடம் பரப்பி தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகவும், இதனால் அவரை கைது செய்ய வேண்டும் என்று கூறி நடிகை கங்கனா ரணாவத் புகார் அளித்துள்ளார்.

Hrithik Roshan circulating my photos, emails, alleges Kangana Ranaut

பிரபல இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனும், நடிகை கங்கனா ரணாவத்தும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இந்த நிலையில், அவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இதைத்தொடர்ந்து, ஹிருத்திக் ரோஷனை விமர்சித்து சமூக வலைதளத்தில் கங்கனா ரணாவத் சில பதிவுகளை வெளியிட்டார். இது தொடர்பாக அவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக இருவரும் மாறி, மாறி வக்கீல் நோட்டீஸ் அனுப்பிக் கொண்டனர்.

இந்த சூழலில், தன்னுடன் எடுத்துக்கொண்ட தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் அவ்வப்போது பரிமாறிக் கொண்ட இ மெயில்களை ஊடகத்தினரிடம் ஹிருத்திக் ரோஷன் கசிய விட்டு விட்டதாகவும், இதனால் அவரை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறும் மும்பை போலீஸ் கமிஷனர் தத்தா பட்சல்கிகரிடம் நடிகை கங்கனா ரணாவத் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த புகாரை திட்டவட்டமாக மறுத்த ஹிருத்திக் ரோஷனின் வக்கீல் திபேஷ் மேத்தா, கங்கனா ரணாவத்தும், அவரது வக்கீலும் குற்றம்சாட்டும் விதத்தில் எந்த ஒரு தவறான செயலிலும் ஹிருத்திக் ரோஷன் ஈடுபட்டதில்லை என்றார்.

English summary
IN A new turn in the legal spat between actors Kangana Ranaut and Hrithik Roshan, the former’s lawyer has shot off a letter to the Mumbai police commissioner alleging circulation of her private photographs and emails to “third parties” by the latter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil