For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ப்யூர் வெறித்தனம்.. அந்த பில்டிங்கிலருந்து குதித்து வெட்டுற ஷாட்லாம்.. விக்ரம் வேதா டிரைலர் ரிலீஸ்!

  |

  சென்னை: விஜய்சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியான விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரியே பாலிவுட்டில் இன்னும் பிரம்மாண்டமாக இயக்க வாய்ப்பு கிடைத்தால் சும்மா விடுவார்களா?

  ஹ்ரித்திக் ரோஷன், சைஃப் அலிகான், ராதிகா ஆப்தே என நடிப்பின் பவர்ஹவுஸ் நடிகர்களை வைத்துக் கொண்டு இன்னமும் விளையாடி உள்ளனர் இயக்குநர்கள் என்பது தற்போது வெளியாகி உள்ள டிரைலரை பார்த்தாலே தெரிகிறது.

  அதிலும் அந்த மாடியில் இருந்து குதித்து ஒருவரை நடு மண்டையிலேயே ஹ்ரித்திக் ரோஷன் வெட்டும் காட்சி மிரட்டுகிறது.

  திரையரங்குகளில் 100வது நாள்.. விக்ரம் படத்தின் வெற்றிக் கொண்டாட்டம்!திரையரங்குகளில் 100வது நாள்.. விக்ரம் படத்தின் வெற்றிக் கொண்டாட்டம்!

  தமிழில் தாறுமாறு ஹிட்

  தமிழில் தாறுமாறு ஹிட்

  ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் தனது பிரில்லியன்ட்டான ஸ்டோரி டெல்லிங் மூலம் வியக்க வைத்தனர் புஷ்கர் - காயத்ரி தம்பதியினர். விஜய்சேதுபதி இப்போ ஃபுல் டைம் வில்லனாக மாற காணமே அந்த விக்ரம் வேதா படத்தில் அவருக்குள் தூங்கிட்டு இருந்த மிருகத்தை இவங்க ரெண்டு பேரும் தட்டி எழுப்புனது தான்.

  ரொம்ப பிடிச்சு போச்சு

  ரொம்ப பிடிச்சு போச்சு

  அக்‌ஷய் குமார், அஜய் தேவ்கன் என ஏகப்பட்ட நடிகர்கள் தமிழ் படங்களை ரீமேக் செய்து நடித்து வரும் நிலையில், கோலிவுட்டில் இருந்து எந்த படத்தை ரீமேக் செய்யலாம் என யோசித்த ஹ்ரித்திக் ரோஷனுக்கு விக்ரம் வேதா படத்தை பார்த்ததும் பிடித்துப் போனது. நமக்குள்ளையும் ஒரு வேதாளம் இருக்குதே அதை தட்டி எழுப்பலாம் என நினைத்த அவர் புஷ்கர் காயத்ரியையே புக் பண்ண விதத்தில் தப்பித்துக் கொண்டார்.

  வெளியானது டிரைலர்

  வெளியானது டிரைலர்

  விக்ரம் வேதா படத்தின் டீசர் வெளியான போது அதை பார்த்த ரசிகர்கள் இரண்டு படங்களையும் அதிகளவு ஒப்பிட்டனர். மேலும், அமீர்கானுக்கு ஹ்ரித்திக் ரோஷன் சப்போர்ட் செய்ததும் இவருடைய விக்ரம் வேதா படத்தையும் புறக்கணிக்க வேண்டும் என ட்ரோல் செய்தனர். ஆனால், அதையெல்லாம் தவிடு பொடியாக்கும் விதமாக தற்போது வெறித்தனம் காட்டுகிறது விக்ரம் வேதா டிரைலர்.

  ஆக்‌ஷனில் மிரட்டல்

  ஆக்‌ஷனில் மிரட்டல்

  கதை எப்படியோ தெரிந்தது தான் என்கிற பட்சத்தில் விஷுவலாகவும் ஆக்‌ஷனிலும் எந்த அளவுக்கு மிரட்ட முடியுமோ அந்த அளவுக்கு மிரட்டலாம் என நினைத்து புஷ்கர் காயத்ரி ஹ்ரித்திக் ரோஷனையும், சைஃப் அலி கானையும் மோத விட்டு பெண்டை நிமித்தியுள்ளனர் என்பது நன்றாகவே தெரிகிறது. அதிலும் அந்த மாடியில் இருந்து குதித்து ஒருத்தரை நடு மண்டையிலேயே ஹ்ரித்திக் ரோஷன் பொளப்பது மட்டும் அவரது இள வயது ஆக்‌ஷன் சீக்வென்ஸ் என அனைத்துமே படம் ஹிட் அடிக்கும் என்கிற நம்பிக்கையை விதைக்கிறது.

  பொன்னியின் செல்வன் உடன் மோதல்

  பொன்னியின் செல்வன் உடன் மோதல்

  தசரா பண்டிகையை டார்கெட் செய்து பான் இந்தியா படமாக வெளியாகும் பொன்னியின் செல்வனுக்கு இந்தியில் கடும் போட்டியை கொடுக்கும் விதமாக விக்ரம் வேதா செப்டம்பர் 30ம் தேதி வெளியாகிறது. கோலிவுட்டில் தனுஷின் நானே வருவேன் படமும் பெரும் போட்டியாக மாறி உள்ளது. வரும் ஆயுத பூஜைக்கு எந்த படம் பாக்ஸ் ஆபிஸ் வேட்டை நடத்துகிறது என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

  English summary
  Hrithik Roshan, Saif Ali Khan and Radhika Apte starrer Vikram Vedha hindi remake Trailer out now. Director Pushkar Gayathri stuns audience with the extradinory action sequences.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X