»   »  நான் மனைவியை பிரிய நடிகை கங்கனா காரணமா?: வாரிசு நடிகர் விளக்கம்

நான் மனைவியை பிரிய நடிகை கங்கனா காரணமா?: வாரிசு நடிகர் விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தானும், சூசனும் விவாகரத்து பெற நடிகை கங்கனா காரணமா என்பது குறித்து பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் விளக்கம் அளித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் 7 ஆண்டுகளாக தன்னுடன் தொடர்பு வைத்திருந்ததாக நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். ஆனால் இதை ரித்திக் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இருவருக்கும் இடையேயான சண்டை தற்போது மீண்டும் சூடுபிடித்துள்ளது.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

கங்கனாவின் குற்றச்சாட்டு அபத்தமானது. இரண்டு பிரபலங்கள் 7 ஆண்டுகளாக தொடர்பு வைத்திருந்தால் அது மீடியாவுக்கு தெரியாமலா போய்விடும் என்று கேட்டுள்ளார் ரித்திக்.

தொடர்பு

தொடர்பு

ரித்திக் ரோஷன் கங்கனாவுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததை அவரின் மனைவி சூசன் கண்டுபிடித்ததால் தான் விவாகரத்து வாங்கி சென்றுவிட்டார் என்று கூறப்பட்டது. இதை ரித்திக் மறுத்துள்ளார்.

விவாகரத்து

விவாகரத்து

நானும், சூசனும் பிரிய கங்கனா காரணம் இல்லை. ஒரு தம்பதி பிரிந்தால் கள்ளத்தொடர்பு தான் காரணமாக இருக்க வேண்டுமா? நானும், சூசனும் தற்போதும் நல்ல நண்பர்களாக உள்ளோம் என்று ரித்திக் தெரிவித்துள்ளார்.

விருப்பம் இல்லை

விருப்பம் இல்லை

நாங்கள் விவாகரத்து பெற்றதற்கான காரணம் எனக்கும், சூசனுக்கும் தெரியும். அதை வெளியே சொல்ல விரும்பவில்லை. அதே போன்று கங்கனா விவகாரம் பற்றி இனி பேச விரும்பவில்லை என்று ரித்திக் கூறியுள்ளார்.

English summary
Bollywood actor Hrithik Roshan said that he didn't divorce Sussanne Khan because of actress Kangana Ranaut.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil