Just In
- 4 hrs ago
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- 5 hrs ago
லைகா தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் டான்.. வெளியானது சூப்பர் அப்டேட்!
- 5 hrs ago
சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி‘ … வெளியானது மிரட்டலான முன்னோட்ட காட்சி!
- 5 hrs ago
குப்புறப்படுத்து தீவிர யோசனை.. என்ன ஆச்சு குமுதா.. ஏன் இவ்வளோ சோகம் !
Don't Miss!
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Automobiles
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஜெனிலியாவுக்கு பிறந்தநாள்: வித்தியாசமாக வாழ்த்திய கணவர் ரித்தேஷ்
மும்பை:பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் தனது மனைவி ஜெனிலியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து போட்ட ட்வீட்டை பார்த்து ரசிகர்களால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்த ஜெனிலியா பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். ஜெனிலியா, ரித்தேஷ் தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

ஜெனிலியா இன்று தனது 32வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஜெனிலியாவை வாழ்த்தி ரித்தேஷ் தேஷ்முக் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
நம் நெருங்கிய தோழியே வாழ்க்கைத் துணையாக வந்தால் வாழ்வு வரமாகும். என் டார்லிங் ஜெனிலியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். எனக்கு தெரிந்து நீ தான் ஸ்டிராங்கான தாய். நம் குடும்பம் ஒன்றாக இருக்க நீ தான் காரணம். இந்த வாழ்க்கையில் செய்யும் அனைத்து நல்ல காரியங்களுக்காக அடுத்த பிறவியிலும் உனக்கு அதே கணவரை அளித்து கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்று வாழ்த்தியுள்ளார்.
Life is bliss-when your best friend becomes your life partner.Happy Birthday my darling Baiko @geneliad You are the strongest mother I know, you are the adhesive that holds our family together. For all the good deeds in this life may god bless you with the same husband in ur next pic.twitter.com/x2D4kvwEOl
— Riteish Deshmukh (@Riteishd) August 5, 2019
ரித்தேஷின் வாழ்த்து ட்வீட்டில் கடைசி வரி தான் அல்டிமேட் என்கிறார்கள் பிரபலங்களும், ரசிகர்களும். திருமணம், குழந்தைகள் என்றான பிறகு ஜெனிலியா படங்களில் அவ்வளவாக கவனம் செலுத்துவது இல்லை.
இந்நிலையில் அவர் கடந்த ஆண்டு மராத்தி திரையுலகில் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தார். ஜெனிலியா தன் மனதிற்கு பிடித்தவற்றை செய்ய முழு உரிமை அளித்துள்ளார் கணவர் ரித்தேஷ். பாலிவுட் கொண்டாடும் தம்பதிகளில் ஒன்றாக உள்ளது ஜெனிலியா-ரித்தேஷ் தம்பதி. ரித்தேஷ் தேஷ்முக்கின் பெயர் எந்த கிசுகிசுக்களிலும் வருவது இல்லை.
தான் மிகவும் கொடுத்து வைத்தவள், கடவுளின் செல்லக் குழந்தை என்று ஜெனிலியா அவ்வப்போது கூறி வருகிறார்.