பாவனிக்கு முத்தம் கொடுத்த அமீர்... யார் மீது தவறு ?...சோஷியல் மீடியாவில் காரசார பட்டிமன்றம்

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 ன் நேற்றைய எபிசோடில் அமீர், பாவ்னிக்கு முத்தம் கொடுத்த விவகாரம் சோஷியல் மீடியாவில் மிகப் பெரிய விவாத பொருளாகி, பட்டிமன்றமே நடத்தும் அளவிற்கு வாதங்களும், ஆராய்ச்சிகளும் தீவிரமாக சென்று கொண்டிருக்கின்றன.

பிக்பாஸில் கடந்த சில வாரங்களாகவே பாவ்னி - அபினய் காதல் விவகாரம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. இதனால் பலமுறை பாவ்னி அழுததும், மற்றவர்கள் சண்டை போட்டதும் அடிக்கடி நடந்து வந்தது. இறுதியாக கமல் வந்து நீண்ட நேரம் பேசியும் இந்த பிரச்சனைக்கு முடிவு ஏற்படவில்லை. கமல் பேசிய பிறகும் பாவ்னி- அபினய் ஆகியோர் இது பற்றி பேசி சண்டை போட்டனர். பாவனியும், அமீரிடம் தொடர்ந்து இது பற்றியே பேசி வந்தார்.

 சரியாக கணித்த வருண்

சரியாக கணித்த வருண்

இதே போல் நேற்றைய எபிசோடிலும் இது பற்றி பேசப்பட்டது. வருண் நேரடியாக, அபினயிடமே நாளை நீங்கள் தான் வெளியே போக போகிறீர்கள். எனக்கு 100 சதவீதம் தெரியும் என கூறி விட்டார். இருந்தாலும் சிறிது நம்பிக்கையுடன் நான் அல்லது பாவ்னி தான் வெளியே போவோம் என்கிறார் அபினய்.

முத்தம் கொடுத்த அமீர்

முத்தம் கொடுத்த அமீர்

அதே சமயம் பெட்ரூமில் இது சம்பந்தமாக பாவனி மற்றும் அமீர் பேசுகிறார்கள். அப்போது பாவனியிடம், ஒன்று கேட்கலாமா என அமீர் கேட்க, என்ன வாழ்க்கையையா கேட்க போகிறாய். சும்மா கேளுடா என்றார் பாவனி. அப்போது பாவனியின் காதோரம் ரகசியம் சொல்வது போல் போய், முத்தம் கொடுத்து விட்டு, கூலாக ஸ்டிரஸ் இல்லாமல் நிம்மதியாக தூங்கு என்கிறார். ஆனால் அவர் செய்தது பிடிக்கவில்லை என்கிறார் பாவனி.

பாவ்னி ஏன் அடிக்கவில்லை

பாவ்னி ஏன் அடிக்கவில்லை

அமீர், பாவனிக்கு முத்தம் கொடுத்த விவகாரம் சோஷியல் மீடியாவில் உடனடியாக ட்ரோல் செய்யப்பட்டு, அது பற்றி நெட்டிசன்கள் விவாதிக்க துவங்கி விட்டனர். சிலர், பாவனி மீது தான் தவறு. பொளேர் என அரை விடாமல் அவர் ஏன் அமைதியாக இருக்க வேண்டும். அபினய் உடனான காதல் பற்றி மற்றவர்கள் பேசிய போது ஆவேசமாக கத்திய பாவனி, இப்போ ஏன் அமைதியாக இருந்தார் என கேள்வி எழுப்பி உள்ளனர்.

லவ் டார்ச்சர் செய்யும் அமீர்

லவ் டார்ச்சர் செய்யும் அமீர்

ஆனால் பெரும்பாலானவர்கள் பாவனிக்கு ஆதரவாக, அவ தான் நோ சொல்லி விட்டாளே அதற்கு பிறகும் ஏன் அமீர் எல்லை தாண்டி நடந்து கொள்கிறான். இவர் ரொம்ப ஓவராக நடந்து கொள்கிறான். ஒரு பெண்ணிற்கு விருப்பம் இல்லை என்னும் போது, இது லவ் டார்ச்சர் செய்து, துன்புறுத்துவதற்கு சமம். இதற்கு அபினய் எவ்வளவோ பரவாயில்லை. அமீரை கைது செய்ய வேண்டும் என வாதம் செய்து வருகின்றனர்.

 தெரிஞ்சு தான பார்க்குறீங்க

தெரிஞ்சு தான பார்க்குறீங்க

இன்னும் சிலரோ விஜய் டிவி.,யை திட்டி தீர்த்து வருகிறார்கள். எதெல்லாம் எடிட் செய்து ஒளிபரப்ப வேண்டும் அதை எல்லாம் கட் செய்து விட்டு. எதை எடிட் செய்து கட் செய்ய வேண்டுமோ அதை ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறீர்கள். ஒரு சிலரோ, பிக்பாஸ் என்பது சினிமா போன்றது. இதில் லவ், சண்டை, முத்தம், அழுகை எல்லாம் தான் இருக்கும். இது தெரிந்து தான் அனைவரும் பார்க்கிறார்கள். பிறகு ஏன் ஓவரா ரியாக்ட் செய்கிறீர்கள் என கேட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X