»   »  மலாய் மக்களைக் கவர்ந்த ரஜினியின் கபாலி மலாய் டீசர்!

மலாய் மக்களைக் கவர்ந்த ரஜினியின் கபாலி மலாய் டீசர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கபாலி படத்தின் மலாய் மொழி டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ரஜினி நடிப்பில் இதுவரை வேறு எந்தப் படத்துக்கும் இல்லாத எதிர்ப்பார்ப்பு கபாலிக்கு ஏற்பட்டுள்ளது. ரஜினியின் முந்தைய படங்கள் கோச்சடையான், லிங்கா இரண்டுமே பெரும் சர்ச்சைகளைச் சந்தித்தன. வணிக ரீதியில் சரியாகப் போகவில்லை என்று சொல்லப்பட்ட நிலையில், கபாலி உருவானது.

Huge response for Kabalai Malay teaser

இந்தப் படத்தில் முற்றிலும் வித்தியாசமான கூட்டணி அமைந்திருப்பதால், படத்துக்கு எதிர்ப்பார்ப்பு அதிகரித்தது. அதை மேலும் அதிகரித்துவிட்டது, சமீபத்தில் வெளியான கபாலி டீசர். 2 கோடி பார்வைகளைப் பெற்று இந்த டீசர் சர்வதேச அளவில் பிரபலமாகிவிட்டது.

இதனைத் தொடர்ந்து கபாலியின் மலாய் மொழி டீசரை வெளியிட்டுள்ளனர். இந்த டீசருக்கு மலேசிய மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. முதல் முறையாக மலாய் மொழியில் டப் செய்யப்பட்ட இந்தியப் படம் என்ற பெருமை கபாலிக்கு கிடைத்துள்ளது.

இந்தப் படம் மலேசியாவில் ஏராளமான திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

English summary
The Malay version of Rajinikanth's Kabali Teaser gets big reception all over Malaysia.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil