பின்னாலிருந்து கட்டி அணைத்து.. பாகுபலி பாணியில் ரச்சிதாவிடம் ரொமான்ஸ்..ராபர்ட் மாஸ்டர் அட்ராசிட்டி
ராஜா ராணி டாஸ்க்கில் வாய்ப்பு கிடைத்தவுடன் கேப்பில் கிடா வெட்டினார் ராபர்ட் மாஸ்டர்.
ராஜாவின் ராணியாக ரச்சிதா தேர்வு செய்யப்படும்போதே இருக்கு தரமான சம்பவம் இருக்குன்னு நெட்டிசன்கள் சொன்னது உண்மையாகி வருகிறது.
வில் அம்பை எடுத்து பாகுபலி ஸ்டைலில் ரச்சிதாவை பின்னால் இருந்து கட்டி அணைத்து ரொமான்ஸ் செய்தார் ராபர்ட் மாஸ்டர்.

பிக்பாஸ் வீட்டில் தரமான சம்பவம்
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் ராஜா ராணி டாஸ் கொடுக்கப்பட்டுள்ளது. ராஜா, ராணி இளவரசன், இளவரசி, படைத்தளபதி, ராஜகுரு என ராஜ வம்சமும், சேவகர்கள் என இரண்டு குழுக்களும் பிரிந்து டாஸ்க் விளையாட வேண்டும். இதில் ராஜாவாக ராபர்ட் மாஸ்டரும், ராணியாக ரச்சிதாவும் தேர்வு செய்யப்பட்டனர். இளவரசியாக ஜனனி, இளவரசனாக மணிகண்டன், படைத்தளபதியாக அசீம், ராஜகுருவாக விக்ரமனும் தேர்வு செய்யப்பட்டனர். இதில் ராஜாவாக ராபர்ட் மாஸ்டர், ராணியாக ரட்சிதா தேர்வு செய்யப்பட்டவுடன் தரமான சம்பவம் இருக்கு என்று நேற்று பதிவு செய்திருந்தனர் நெட்டிசன்கள். அந்த சம்பவம் இன்றைய இன்றே ஆரம்பித்துவிட்டது.

ராபர்ட் மாஸ்டரின் இத்துப்போன முதுமைக்காதல்
ராபர்ட் மாஸ்டர் பிக்பாஸ் வீட்டிற்கு வந்ததிலிருந்து முதுமை காதலில் ஈடுபட்டு வருகிறார். அவரது இத்துப்போன பழைய காதல் பூங்காற்று திரும்புமா என்கிற பாணியில் ரச்சிதாவை நோக்கி காதல் அம்புகளை விட அது ஒவ்வொரு முறையும் 23 ஆம் புலிகேசி மன்னனின் அம்புகளாக தோல்வியிலேயே முடிந்து வருகிறது. இதை நெட்டிசன்கள் ஒவ்வொரு காட்சியும் எடுத்து போட்டு ராபர்ட் மாஸ்டரை கிண்டல் அடித்து வருகின்றனர். மறுபடியும் ரட்சிதாவின் கணவர் இதை கண்டிப்பதும் ரட்சிதா இதற்கெல்லாம் மயங்கமாட்டார் அவர் அனைத்தையும் சமாளித்து வருவார் என்றும் பேட்டியளித்து வருகிறார்.

உஷார் ரஞ்சிதா..உருகும் ராபர்ட் மாஸ்டர்
ரச்சிதா இது பற்றி பேசும்பொழுது ஒரே வீட்டில் வசிக்கிறோம், எடுத்தவுடன் நேரடியாக முகத்தை காண்பித்தால் சிக்கலாகிவிடும் என்பதால் அமைதி காக்கிறேன் என்ன செய்வது இது போன்ற ஆட்களை என் வாழ்நாளில் பல இடங்களில் சந்தித்து இருக்கிறேன் என்று சில நேரம் ஒரு முறை குறிப்பிட்டார். முகத்தாட்சண்யத்தை பார்த்து ரச்சிதா ஒதுங்கிப் போவதை தனது வாய்ப்பாக எடுத்துக் கொண்டு ராபர்ட் மாஸ்டர் தினம், தினம் புதுப்புது டெக்னிக்கைகளை கையாண்டு நெருக்கம் காட்டி வருகிறார். அதில் புதிய டெக்னிக் தான் ராஜா ராணி டாஸ்க்.

கேப்பில் கிடா வெட்டி பாகுபலி ஸ்டைலில் கட்டி அணைத்த ராபர்ட் மாஸ்டர்
ராஜா ராணி டாஸ்க் இருவரும் வேறு வழி இல்லாமல் நன்றாக பழகித்தான் ஆகவேண்டும் என்கிற நிலை. காலையிலிருந்து ராஜா மேக்கப் போடும் பொழுது அவருக்கு ரச்சிதா உதவி செய்தார். சாதாரணமாக ரச்சிதா பேசிக் கொண்டிருந்தார். ஆனால் ராபர்ட் மாஸ்டர் தன் ரொமான்ஸ் வேலையிலேயே குறியாக இருப்பதை பார்க்க முடிந்தது. மேக்கப் எல்லாம் அடைந்த பின் ராணிக்கான உடைகள் வந்தபின் அதை ரச்சிதா அணிந்து வருகிறார். அப்பொழுது அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ள படைக்கலன்களை மன்னர் வகையறாக்கள் பார்வையிடுகின்றனர். அம்பை எடுக்கும் ரச்சிதா பார்வையிட இதுதான் சாக்கென்று அவர் பின்புறமாக சென்று பாகுபலி ஸ்டைலில் வில் அம்பை கற்றுக் கொடுப்பது போல் அணைத்து தன்னுடைய ரொமான்ஸை காட்டுகிறார் ராபர்ட் மாஸ்டர். இதை பார்த்து டீம் மக்கள் எதுவும் சொல்லாமல் அதிர்ந்து போய் நிற்கின்றனர்.

இருக்கு தரமான சம்பவம் இருக்கு
உண்மைதான் ரச்சிதாவை எந்த வகையிலாவது கவரவேண்டும் என்று சுற்றிக் கொண்டிருந்த ராபர்ட் மாஸ்டருக்கு வாய்ப்பாக அமைந்தது ராஜா ராணி டாஸ்க். இதில் ராணியாக தேர்தல் மூலம் ரச்சிதாக தேர்வு செய்யப்பட ஆகா கிடைத்தது சான்ஸ் என்று வாய்ப்பு கிடைத்தவுடன் தனது ரொமான்ஸை காட்டிவிட்டார் ராபர்ட் மாஸ்டர். இதன் விளைவு என்ன ஆகுமோ என்பது இனிமேல் தான் தெரியும். ராஜா ராணி டாஸ்கின் பெரும் சுவாரஸ்யம் நடக்கும் போகப்போக மோதல் சண்டைகள் கிளம்பும் என்று நேற்று நெட்டிசன்கள் பதிவிட்டிருந்தனர். அது இப்பொழுது ஆரம்பித்து விட்டது என்று சொல்லலாம்.


Click it and Unblock the Notifications











