»   »  ஐஸ்வர்யா ராய் நடித்த படத்தின் போஸ்டர் தான் சல்மான் கானுக்கு பிடித்துள்ளது

ஐஸ்வர்யா ராய் நடித்த படத்தின் போஸ்டர் தான் சல்மான் கானுக்கு பிடித்துள்ளது

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு தான் நடித்துள்ள பிரேம் ரத்தன் தன் பாயோ படத்தின் போஸ்டரை விட ஐஸ்வர்யா ராயுடன் நடித்த ஹம் தில் தே சுகே சனம் போஸ்டர் தான் பிடித்துள்ளது.

சூரஜ் பர்தாஜ்யா இயக்கத்தில் சல்மான் கான், சோனம் கபூர் ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் பிரேம் ரத்தன் தன் பாயோ. சூரஜ் படம் என்றால் சல்மான் கானின் பெயர் நிச்சயம் பிரேம் தான். இந்த படத்திலும் சல்மானின் பெயர் பிரேம்.

இந்நிலையில் படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

போஸ்டர்

போஸ்டர்

பிரேம் ரத்தன் தன் பாயோ படத்தின் போஸ்டரில் சோனம் கபூர் அழகான சேலை உடுத்தி படுத்திருக்கிறார். அவரை கண்களில் காதல் பொங்க சல்மான் கான் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

சல்மான்

சல்மான்

பிரேம் ரத்தன் தன் பாயோ படத்தின் போஸ்டரை விட ஹம் தில் தே சுகே சனம் படத்தின் போஸ்டர் தான் நன்றாக இருந்தது என்று சல்மான் கான் தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய்

ஹம் தில் தே சுகே சனம் படத்தில் சல்மான் கானுடன் அவரது முன்னாள் காதலியான ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். படத்தில் அவர்களுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி அருமையாக இருந்தது.

ஒப்பீடு

ஒப்பீடு

ஹம் தில் தே சுகே சனம் படத்தில் ஐஸ்வர்யா ராயை சல்மான் கொஞ்சும் புகைப்படத்துடன் பிரேம் ரத்தன் தன் பாயோ படத்தின் போஸ்டரை ரசிகர்கள் ஒப்பிட்டு பார்த்து வருகிறார்கள்.

English summary
Days after labelling a question on Aishwarya as ‘jazbati’ (emotional), Salman Khan said that the poster of Hum Dil De Chuke Sanam (1999) was better than that of Prem Ratan Dhan Payo. The actor was speaking at the trailer launch of Sooraj Barjatya’s latest venture.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil