»   »  ஆர்வக்கோளாறில் 'காலா' ரகசியத்தை வெளியிட்ட ஹூமா குரேஷி

ஆர்வக்கோளாறில் 'காலா' ரகசியத்தை வெளியிட்ட ஹூமா குரேஷி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காலா படத்தில் வரும் கதாபாத்திரங்கள் பற்றிய தகவலை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஹூமா குரேஷி.

கபாலி படத்தை அடுத்து பா. ரஞ்சித், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ள படம் காலா. படப்பிடிப்பு கடந்த 28ம் தேதி துவங்கியது.

படப்பிடிப்பு போலீஸ் பாதுகாப்புடன் மும்பையில் நடந்து வருகிறது.

ஹூமா

ஹூமா

காலா படம் குறித்த தகவலை ஹீரோயின் ஹூமா குரேஷி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். படத்தில் அவரது கதாபாத்திரத்தின் பெயர் ஜரீனா என்பதை தெரிவித்துள்ளார்.

ஜரீனா

ஹூமா தனக்கு அளிக்கப்பட்ட காட்சி பேப்பர்களை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். ஜரீனாவாக மாறிக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

பீம்ஜி

பீம்ஜி

ஹூமா வெளியிட்டுள்ள புகைப்படத்தில் காலா பீம்ஜியுடன் பைக்கில் செல்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பீம்ஜி கதாபாத்திரம் யார் என தெரியவில்லை.

அம்பேத்கர்

அம்பேத்கர்

சட்ட மேதை அம்பேத்கரை பீம்ஜி என்பார்கள். இயக்குனர் ரஞ்சித்தின் ட்விட்டர் கணக்கின் பெயரும் பீம்ஜி. காலா படத்தில் அம்பேத்கர் கதாபாத்திரம் இருப்பதாக கூறப்படும் நிலையில் ஹுமாவின் ட்வீட் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Huma Qureshi has revealed some details about Rajinikanth's upcoming movie Kaala being directed by Pa. Ranjith.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil