ஷகிலா பயோபிக் படமாகிறது… ஷகிலாவாக நடிக்கப்போவது யார் தெரியுமா?

சென்னை : ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு தமிழில் திரைப்படமாக உருவாக உள்ளது.

Recommended Video

Shakeela Biopic என் வாழ்க்கையில நிறைய தப்பு பண்ணியிருக்கேன் | Filmibeat tamil

இப்படத்தை ஷகிலாவே தயாரிக்க திட்டமிட்டுள்ளார். மேலும், ஷகிலா கதாபாத்திரத்தில் நடிக்க முன்னணி நடிகை ஒருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

பாலிவுட் நடிகை ரிச்சா சத்தாவு நடித்த ஷகிலா திரைப்படம் இந்தியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

ப்ளே கேர்ள்ஸ்

ப்ளே கேர்ள்ஸ்

மலையாளத் திரைப்படமான ப்ளே கேர்ள்ஸ் திரைப்படத்தின் துணை நடிகையாக அறிமுகமானார் ஷகிலா. பாலுணர்வு கிளர்ச்சியூட்டும் படங்களில் நடித்து தனக்கென பெரும் ரசிகர் கூட்டத்தை சேர்ந்துக் கொண்டு புகழ் பெற்றார்.

 90களில் பிரபலம்

90களில் பிரபலம்

90களில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் , கன்னடம் என அனைத்து மொழிகளிலும் கொடிகட்டி பறந்தார் ஷகிலா. அந்த கால கட்டத்தில் முன்னணி நடிகர்களின் படங்களை விட இவரது படங்கள் வசூலில் சாதனை படைத்தன. இதனால் பிரபல கதாநாயகர்களின் படங்கள் வெளியாவது பெரும் சவாலாக இருந்தது.

 குணசித்திர நடிகை

குணசித்திர நடிகை

மலையாள படம் என்றாலே அது ஷகிலா படம் தான் என்று பேசப்பட்டவர் ஷகிலா. கிட்டத்தட்டட 110க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஆபாச படங்களில் மட்டுமல்லாமல் குணசித்திர வேடம், நகைச்சுவை கதாபாத்திரம் என அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் ஷகிலா நடித்துள்ளார்.

வறுமை

வறுமை

சிறுவயதில் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வளர்ந்து, வறுமையின் பிடியில் சிக்கி இறுதியில் குடும்பத்திற்காக காம கிளர்ச்சியூட்டும் படங்களில் நடிக்க தொடங்கினார் ஷகிலா. எந்த பெண்ணும் செய்யத்தயங்கும் கதாபாத்திரத்தை புன்முறுவலோடு தன் குடும்பத்திற்காக ஏற்றுக்கொண்டார்.

சுயசரிதை

சுயசரிதை

ஒரு பெண்ணுடலாக மட்டுமே பார்க்கப்பட்ட ஷகிலாவின் பிம்பத்தைக் கடந்து ஒரு துயர் மிகுந்த இதயத்தை ஷகிலா தனது சுயசரிதையில், எனக்கு குற்றவுணர்வு இல்லை, ஆனால் வேதனை இருக்கிறது என, வண்ண விளக்கு வெளிச்சத்திற்கு பின்னால் இருக்கும் கனத்தை இருளை அழகாக நூலில் எழுதி இருக்கிறார்.

 பாயோபிக் படமானது

பாயோபிக் படமானது

காமகளி வேட்டை கடந்து ஒரு பெண்ணின் வாழ்க்கை துயர் பக்கங்களை பேசும் ஷகிலாவின் சுயசரிதை புத்தகம் தற்போது திரைப்படமாக வெளியாகி உள்ளது. இந்தப்படத்தை கன்னட இயக்குநர் இந்திரஜித் லங்கேஷ் இயக்கி உள்ளார். இப்படத்தில் பாலிவுட் நடிகை ரிச்சா சத்தாவு ஷகிலா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.

சிலரால் ஏமாற்றப்பட்டேன்

சிலரால் ஏமாற்றப்பட்டேன்

இப்படம் குறித்து கருத்து தெரிவித்த ஷகிலா, புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் முழுமையாக சினிமாவில் சொல்ல முடியாது. இன்னும் சொல்ல முடியாத பல வேதனைகள் மனதிற்குள் ஒளிந்து இருக்கின்றன என்றார்.
கணவர், குடும்பம், குழந்தை என வாழ ஆசையாக இருந்தது. ஆனால், திருமணம் என்ற பெயராலும் சிலரால் ஏமாற்றப்பட்டேன், என்னைப்போல எந்த பெண்ணும் ஏமாந்துவிடக் கூடாது. என் படம் ஒரு பாடமாக இருக்கட்டும். இதைத்தான் படமாக எடுத்து இருக்கிறார்கள்.

அன்போடு அம்மாவாக

அன்போடு அம்மாவாக

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ஷகிலா மீதான கண்டோட்டமே மக்களுக்கு மாறிவிட்டது. ஷகிலாவை இதுவரை ஆபாச பொருளாக பார்த்த அனைத்து விழிகளும் இன்று, அந்த நிகழ்ச்சியில் அனைவரும் அவரை அம்மா என்று அன்புடன் அழைத்து வருகின்றனர். இதுவரை ஆண்கள் மட்டுமே ரசிகர்களாக இருந்த நிலையில் தற்போது பெண்களும் இவரது ரசிகைகளாக மாறி உள்ளனர்.

ஹூமா குரேஷியிடம் பேச்சுவார்த்தை

ஹூமா குரேஷியிடம் பேச்சுவார்த்தை

இந்நிலையில் ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு இந்தியில் திரைப்படமாக உருவாகி வருகிறது. அதேபோல , தமிழிலும் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தை எடுக்க ஷகிலா திட்டமிட்டுள்ளதாகவும். தானே இத்திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும் ஷகிலா கூறியுள்ளார். மேலும், ஷகிலாவாக ரஜினிகாந்துடன் காலா திரைப்படத்தில் நடத்த ஹூமா குரேஷியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஹூமா குரேஷி தற்போது வலிமை படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்துள்ளார்.

வதந்தி

வதந்தி

கடந்த வாரம் ஷகிலா உடல்நலம் பாதிக்கப்பட்டடு உயிரிழந்து விட்டதாக தகவல் காட்டுத்தீ போல பரவியது. இதையடுத்து, இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு நான் நல்லத்தான் இருக்கேன் எனக்கு ஒன்றும் இல்லை, நான் இறந்துவிட்டதாக பரவிய செய்தி வெறும் வதந்தி அதை யாரும் நம்பவேண்டம் என்று கூறியிருந்தார். மேலும், நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பை எனக்கு புரிய வைத்த வதந்தியை பரப்பியவருக்கு நன்றி என்றும் கூறியிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X