சிரஞ்சீவியின் பெயர், போட்டோவை அனுமதியின்றி பயன்படுத்தக்கூடாது.. நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் புகழைப் பாதுகாக்கும் வகையில் ஹைதராபாத் சிவில் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அவரது அனுமதி இல்லாமல், அவரது உருவம், புகைப்படம், பெயர் அல்லது குரலை எந்த ஒரு நோக்கத்திற்காகவும் பயன்படுத்தக் கூடாது என தடை விதித்துள்ளது.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் பட்டியலில், மலையாளத்தில் மோகன்லாலும் மம்மூட்டியும், தமிழில் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும், தெலுங்கில் சிரஞ்சீவியும் இடம்பெறுகிறார்கள். சிரஞ்சீவியை அவரது ரசிகர்கள் "மெகா ஸ்டார்" என்ற செல்லமாக அழைத்து வருகின்றனர். தற்போது, சிரஞ்சீ நயன்தாராவுடன் 'மன சங்கர வர பிரசாத் கரு' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அந்த படத்தின் போஸ்டர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Chiranjeevi photo
Photo Credit:

மெகா ஸ்டார் சிரஞ்சீவி: இந்நிலையில், மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஃபேன்ஸ் அசோசியேஷன் மாநிலத் தலைவர் என். சுவாமி நாயுடு ஹைதராபாத் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், சிரஞ்சீவியின் பெயர் மற்றும் அடையாள உரிமைகளைப் பயன்படுத்தி சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுவதைத் தடை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கு ஐதராபாத் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், இணையதளம், சமூக வலைத்தளங்கள், செய்தி ஊடகங்கள், விளம்பரங்கள் என எந்த ஒரு தளத்திலும் சிரஞ்சீவியின் அங்கீகரிக்கப்படாத பயன்படுத்த நீதிமன்றம் தடை செய்துள்ளது. நீதிமன்றம் பிறப்பித்த இந்த தடை உத்தரவு, சிரஞ்சீவியின் பிற்கால வாழ்க்கை மற்றும் அவரது சமூக சேவைகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். அவரது அடையாளம் எந்தவொரு வணிக அல்லது அரசியல் ஆதாயத்திற்காகவும் தவறாகப் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்படும்.

ஐஸ்வர்யா ராய்: அண்மையில் நடிகை ஐஸ்வர்யா ராய்,டெல்லி உயர்நீதிமன்றத்தில் அனுமதியின்றி தனது புகைப்படத்தை யாரும் பயன்படுத்தக்கூடாது என்று கோரியிருந்தார். பல வலைத்தளங்கள் தனது பெயரைப் பயன்படுத்தி ஆன்லைன் லாட்டரி, பணப் பரிமாற்றம் செய்து பொதுமக்களை ஏமாற்றுவதாகவும், பொருட்களை விற்பனை செய்வதாகவும், ஏஐ-யால் உருவாக்கப்பட்ட அவரது மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் பரப்பப்படுவதாகவும் புகார் கொடுத்திருந்தார். இதையடுத்து டெல்லி உயர்நீதிமன்றம் ஐஸ்வர்யா ராயின் புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்த தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X