»   »  டிக்கெட் கட்டணம் உயர்வு... டல்லடித்த திரையரங்குகள்!

டிக்கெட் கட்டணம் உயர்வு... டல்லடித்த திரையரங்குகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டிக்கெட் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டதால், நேற்று திரையரங்குகளில் கூட்டம் கணிசமாகக் குறைந்துவிட்டது.

ஜிஎஸ்டி வரி விதிப்புக்குப் பிறகு சினிமா தியேட்டர்களில் கட்டணங்கள் நேற்று முதல் திருத்தி அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி மால்களில் உள்ள திரையரங்குகளில் அதிகபட்சமாக ரூ 200 வரை வசூலிக்கின்றனர். பார்க்கிங் கட்டணம் ஒரு மணி நேரத்துக்கு இவ்வளவு என நிர்ணயித்துள்ளனர். அதுவே ரூ 150 வரை போகிறது.

Hyper ticket price causes low crowd in theaters

ஒரு தனி நபர் படம் பார்க்க குறைந்தது ரூ 500 தேவை என்று ஆகிவிட்டது. மேலும் தின்பண்டங்களின் விலையும் தாறு மாறாக உயர்த்தப்பட்டுள்ளது. திரையரங்குகள் தங்களுக்கு விதிக்கப்பட்ட வரியை மக்கள் தலையில் இறக்கி வைத்துள்ளனர்.

இதனால் தியேட்டர்களில் கணிசமாக கூட்டம் குறைந்துள்ளது. வெள்ளிக்கிழமைகளில் தியேட்டர்களுக்கு கூட்டம் அலைமோதும். ஆனால் நேற்றுபல அரங்குகள் வெறிச்சோடின. ஸ்பைடர்மேன் படம் வெளியாகியுள்ள சில அரங்குகளில் மட்டும் கூட்டம் நிறைந்திருந்தது. ஆனால் அவர்களும் டிக்கெட் விலை உயர்வுக்கு கடுமையான அதிருப்தியைத் தெரிவித்தனர். மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் கூட மக்களின் கூட்டம் குறைவாக காணப்பட்டது.

English summary
After revised ticket prices, the crowd in theaters and malls reduced a lot.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil