எனக்கே தெரியாம அப்படி நடந்துகிட்டேன்... பொன்னியின் செல்வன் விழா பற்றி திரிஷா

சென்னை: இதுவரை எந்த ஒரு தமிழ்ப் படத்திற்கும் இல்லாத அளவிற்கு பொன்னியின் செல்வன் படத்திற்கு எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என்று பல மொழிகளில் இருக்கும் நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் புரமோஷனல் நிகழ்ச்சி ஒன்றில் நடிகை திரிஷா தன்னை பற்றிய சுவாரசியமான விசயங்களை பகிர்ந்துள்ளார்.

 பறந்து பறந்து புரமோஷன்

பறந்து பறந்து புரமோஷன்

இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் முதல் படத்தில் நடித்துள்ள முன்னணி நடிகர்கள் இந்த படத்திற்காக பல ஊர்களுக்கு சென்று விளம்பரம் செய்து வருகின்றனர் குறிப்பாக நடிகர்கள் கார்த்தி ஜெயம் ரவி மற்றும் நடிகை திரிஷா அனைத்து திரிஷாவை அனைத்து புரமோஷனல் நிகழ்ச்சிகளிலும் காண முடிகிறது.

 செந்தமிழ் வசனங்கள்

செந்தமிழ் வசனங்கள்

படத்தில் உள்ள அனைவருமே செந்தமிழில் வசனம் பேசி நடிக்க வேண்டும் என்பதால் சவாலாக நடித்துள்ளனர். திரிஷா இந்தப் படத்தில் ஒப்பந்தமான போது கூட லைவ் ரெக்கார்டிங் இருக்குமா என்று இயக்குநரிடம் கேட்டாராம். அதற்கு டப்பிங் செய்வோம் ஆனால் லைவ்வில் என்ன பேசவேண்டுமோ அது கண்டிப்பாக இருக்கவேண்டும் என்றுதான் த்ரிஷாவை ஒப்பந்தம் செய்தாராம் மணிரத்தினம். ஏற்கனவே அவர் இயக்கத்தில் ஆயுத எழுத்து திரைப்படத்தில் திரிஷா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 மீராவாக மாறிய குந்தவை

மீராவாக மாறிய குந்தவை

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரகுமான் யாக்கை திரி பாடலை பாடிய பொழுது திடீரென்று அந்தப் பாடலில் ஒரிஜினலாக நடித்திருந்த திரிஷா மற்றும் சித்தார்த் உற்சாகமாக ஆடியபடி பாட துவங்கினர். அது ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இது சம்பந்தமாக குந்தவையாக இருந்த திரிஷா திடீரென ஆயுத எழுத்து மீராவாக மாறியதன் காரணம் என்ன என்று ஒரு நிகழ்வில் கேள்வி கேட்கப்பட்டது.

 ட்ரிகர் செய்த சித்தார்த்

ட்ரிகர் செய்த சித்தார்த்

நான் எப்படி அப்படி மாறினேன் என்று எனக்கே தெரியவில்லை. அதற்கு காரணம் ஏ.ஆர்.ரகுமானின் இசையாக இருக்கலாம். அது இசை என்பதை விட எமோஷனாக நான் கருதுகிறேன் என்று திரிஷா பதிலளித்தார். அவருடன் இருந்த ஜெயம் ரவி அதற்கு காரணம் திரிஷா இல்லை பின்னால் அமர்ந்திருந்த சித்தார்த் தான். அவன் ட்ரிகர் செய்ததால் தான் திரிஷா ஆடினார் என்று வேடிக்கையாக கூறினார். மேலும் ஆயுத எழுத்து படப்பிடிப்பின்போது ஹீரோ ஹீரோயினாக இருவரும் ஆடிவிட்டு சென்றுவிட்டனர். ஆனால் அந்தப் பாடலின் போது துணை இயக்குநர்களாக வேலை பார்த்த நானும் இறுதிச்சுற்று இயக்குநர் சுதாவும் பயங்கரமாக திட்டு வாங்கினோம் என்று கார்த்தி தன் பங்கிற்கு சில சுவாரசியமான தகவல்களை கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X