For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  மணி சார் சொல்லிக் கொடுத்தது போல் நடித்தேன்.. இவரிடம் நடிப்பதே பெரும் பாக்கியம் ஜெயம் ரவி பெருமிதம்!

  |

  சென்னை: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வரும் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்க்கு பெருமளவு எதிர்பார்ப்பு உள்ளது.

  இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மட்டுமில்லாமல், சினிமா துறையில் உள்ள அனைவருக்கும் இப்படத்தின் மீது பெரும் நம்பிக்கை வைத்துள்ளனர்.

  தனக்கு கிடைத்த வாய்ப்பைப் பற்றியும் இந்த படத்தைப் பற்றியும் மனம் திறந்து நடிகர் ஜெயம் ரவி கூறியுள்ளார்.

  சாக்லேட் பாய் இமேஜ், மினிமம் கியாரண்டி: ராஜராஜ சோழனாகிய தனி ஒருவன் ஜெயம் ரவிக்கு இன்று பிறந்தநாள்சாக்லேட் பாய் இமேஜ், மினிமம் கியாரண்டி: ராஜராஜ சோழனாகிய தனி ஒருவன் ஜெயம் ரவிக்கு இன்று பிறந்தநாள்

   நினைவுக்கு வரும் கமல்ஹாசன்

  நினைவுக்கு வரும் கமல்ஹாசன்

  பொன்னியின் செல்வன் படத்தை பற்றி பல பேர் பல கருத்துக்களை கூறிவிட்டனர். நான் என்ன பேசுவது என்று நினைக்கும் போது, இந்த நேரத்துல வீரர்கள் சொல்லும் வார்த்தை, "பார்த்துக்கலாம்" என்ற கமல் சார் டயலாக் நினைவிற்கு வந்தது. இந்த வாய்ப்பு எப்படி வந்தது என்று அனைவரும் கேட்டார்கள். எனக்கு தெரியாது, மணிரத்தினம் கூப்பிட்டார், சென்றேன், நடித்தேன் என்று கூறினேன். இந்த கதாபாத்திரம் கிடைப்பதற்கு நான் அப்படி என்ன நல்லது செய்து விட்டேன் என்று தோன்றியது. ஆனால், நான் சொல்லும்படி அப்படி ஒன்றும் நல்லது செய்யவில்லை.

   அப்பா அம்மா செய்த புண்ணியம் தான் காரணம்

  அப்பா அம்மா செய்த புண்ணியம் தான் காரணம்

  பொன்னியின் செல்வன் வாய்ப்பு கிடைப்பதற்கு ஒருவேளை அப்பா அம்மா செய்த நல்ல விஷயங்கள் தான் காரணம் என்று நினைக்கிறன். அதுதான் உண்மை. பிறகு இன்னும் கொஞ்சம் தீவிரமாக யோசித்தேன். உனக்கு கிடைக்கிறது கிடைக்காம இருக்காது, கிடைக்காம இருக்கிறது கிடைக்காது. என்ற ரஜினி சார் டயலாக் தான் நினைவிற்கு வந்தது. மேலும் இன்னும் கொஞ்சம் தீவிரமாக யோசித்த போது, நான் சினிமாத் துறைக்கு வந்து 20 வருடங்களாகிறது. நீண்ட வருடங்களாக உழைத்திருக்கிறேன், அதன் பலனாகத்தான் இந்த கதாபாத்திரம் எனக்கு கிடைத்திருக்கிறது எனக்கு தோன்றியது.

   சொல்வதை கேளுங்கள்

  சொல்வதை கேளுங்கள்

  கமல் சாரும் ரஜினி சாரும் பல ஆண்டுகள் தங்கள் உழைப்பால் தான் முன்னுக்கு வந்தார்கள். அப்படிப்பட்ட உழைப்பால் தான் எனக்கு இந்த படம் கிடைத்திருக்கிறது என்றும் நான் நம்புகிறேன். அதைத் தாண்டி உங்களுடைய ஆதரவும், இறைவனுடைய அருளும் எனக்கு கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பேச்சால் ஒருவரை மாற்றமுடியுமா? என்று நினைத்தேன். ஆனால், அது மணி சாரால் முடியும் என்று நான் தெரிந்து கொண்டேன். ஏனென்றால், அருண்மொழிவர்மன் யார் என்பதை நான் கூறும்போது நீ இடையில் எதுவும் சொல்லாமல் அமைதியாக கேள் என்று கூறினார்.

   வீட்டில் திட்டு வாங்கினேன்

  வீட்டில் திட்டு வாங்கினேன்

  அருண்மொழிவர்மன் மக்களிடம் எப்படி இருப்பான், அக்காவிடம் எப்படி இருப்பான், மற்ற ராஜாக்களிடம் எப்படி இருப்பான் என்று ஒவ்வொன்றாக விளக்கிக் கொண்டே வந்தார். அவர் சொல்லி முடித்ததும் ஒரு மூட் கிரியேட் ஆச்சி. அப்படியே வீட்டுக்கு சென்றேன். எப்போது பாத்தாலும் ஆதே மூடில் இருந்தேன். இதனால் வீட்டில் திட்டு வாங்கினேன். அது வேறு வழி இல்லை. ஆறு மாதத்தில் அதே மூடில் அவர் சொல்லிக் கொடுத்தது போல் நடித்தேன். இவரிடம் நடிப்பதே பெரும் பாக்கியம். மிக்க நன்றி சார். கார்த்தி இந்த படத்தின் மூலம் சிறந்த நண்பன் ஆகிவிட்டான். அவன் வளர்வதைப் பார்க்க பிடிக்கும். விக்ரம் சார் உலகளவில் பேசப்பட வேண்டும் மனதார வேண்டிக் கொள்கிறேன்.

  விக்ரம் பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம் சார் மற்றும் அனைவருடனும் நடித்ததில் மகிழ்ச்சி. லைகா சுபாஸ்கரனுக்கு நன்றி என்று ஜெயம் ரவி குறிப்பிட்டுள்ளார்.

  English summary
  Ponniyin Selvan, which is going to hit theaters on the 30th, directed by Mani Ratnam, is highly anticipated. The trailer of the film has been well received by the fans. Not only the fans but also everyone in the film industry has a lot of faith in this film, which has a star-studded cast. Actor Jayam Ravi has opened up about the opportunity he got and Ponniyin Selvan film.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X