என்னை தாயாக்கிய ரசிகர்கள்...வைரலாகும் ஷகீலாவின் எமோஷனல் வீடியோ
சென்னை : அடல்ட்ஸ் ஒன்லி படங்களிலேயே அதிகம் நடித்ததால் கவர்ச்சி நடிகை என முத்திரை குத்தப்பட்டவர் ஷகீலா. ஆனால் தற்போது தமிழ் ரசிகர்கள் மனங்களில் அம்மாவாக இடம்பிடித்துள்ளார்.

விஜய் டிவி.,யில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட ஷகீலா, இரண்டாவது பரிசு பெற்றார். இந்த நிகழ்ச்சி தமிழ் ரசிகர்களிடம் ஷகீலாவின் இமேஜை மொத்தமாக மாற்றி உள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பலரும் ஷகீலாவை அம்மா என்று தான் அன்பாக அழைக்கிறார்கள். இது தனது வாழ்நாளில் இதற்கு முன் கிடைக்காத மிகப் பெரிய கவுரவம் என ஷகீலா தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் இது பற்றி ஷகீலா வெளியிட்டுள்ள வீடியோவில், முதலில் ரசிகர்கள் அனைவருக்கும் எனது மிகப் பெரிய நன்றி. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நீங்கள் கொடுத்த ஆதரவால் இரண்டாவது பரிசை பெற்றேன். உங்களின் ஆதரவும், அன்பும் என்னை உண்மையிலேயே மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
பலரும் என்னை அம்மா என கூப்பிடுவதை பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது. குழந்தை பெற்றுக் கொள்ளாமலேயே பலருக்கும் நான் அம்மாவாகி இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என தெரிவித்துள்ளார்.
ஷகீலா வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதற்கு முன் அன்னையர் தினத்தை முன்னிட்டு தனது மகளுடன் ஷகீலா நடத்திய ஃபோட்டோஷுட் ஃபோட்டோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது.


Click it and Unblock the Notifications











